சினிமா செய்திகள்

18 வருஷத்துக்கு பின் களம் இறங்கும் தயாரிப்பு நிறுவனம்.. யானைக்கு பதிலாக அடுத்த விலங்குக்கு தாவிய பிரபு சாலமன்

By Vijay · 30 ஜன 2024 · Updated 10 மே 2025
prabhu solomon

Director Prabhu Solomon: இயக்குனர் பிரபு சாலமன் எடுக்கும் படங்களை நம்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் போய் பார்க்கலாம். ஏனென்றால் அவர் எடுக்கக்கூடிய படங்களில் இயற்கை சம்பந்தமான கதையும், காடு மற்றும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும். அந்த வகையில் மைனா, கும்கி, காடன் மற்றும் செம்பி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

முக்கியமாக கும்கி மற்றும் காடன் படங்களில் யானைக்கு அதிக அளவில் இடம் கொடுத்து இருக்கிறார். இதில் கும்கி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. ஆனால் காடன் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கும்கி இரண்டாம் பாகத்தின் கதையை வைத்து எடுத்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்திற்கும் கதையை தயார் செய்து விட்டார்.

ஆனால் அந்த படத்திற்கு தற்போது முதல் முறையாக யானைக்கு பதிலாக சிங்கத்தை வைத்து எடுக்கப் போகிறாராம். எப்படி கும்கி படத்தில் யானை இருந்ததோ, அதே மாதிரி சிங்கத்தை வைக்கலாம் என்ற யோசனை. ஆனால் அதற்கு சிங்கம் சரிப்பட்டு வருமா என்பது தான் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனாலும் இவருடைய முயற்சிக்கு சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவனமும் தற்போது தலையாட்டி விட்டது. ஆனால் இந்த நிறுவனம் 18 வருடங்களுக்குப் பின் மறுபடியும் இப்பொழுது தான் களமிறங்க போகிறது. அப்படி இருக்கும் பொழுது பிரபு சாலமன் மீது இருக்கும் நம்பிக்கையால் ஓகே சொல்லி இருக்கிறார். அந்த நிறுவனம் யார் என்றால் ரோஜா கம்பைன்ஸ்.

இந்த தயாரிப்பு நிறுவனம் பொற்காலம், பூந்தோட்டம், ஆனந்த பூங்காற்றே, பாட்டாளி, வாஞ்சிநாதன் மற்றும் கடைசியாக 2006 ஆம் ஆண்டு பேரரசு போன்ற படத்தை தயாரித்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபு சாலமன் சிங்கத்தை வைத்து ஒரு கதையை ரெடி பண்ணி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான ஹீரோ மற்றும் ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இதற்கிடையில் கும்கி படத்தின் பார்ட் 2 படபிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு டிசம்பர் மாதம் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக பிரபு சாலமனின் அடுத்த படைப்பு ஆரம்பமாக போகிறது.