சீரியலில் இருந்து காணாமல் போன 4 வசீகரமான நடிகர்கள்.. அமெரிக்கா மாப்பிள்ளைனாலே ஆதி ராஜ் தான்

4 charming actors who are missing from the serial: தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்  நடிகைகளை கூட தமிழ் ரசிகர்கள் மறந்து விடுவது உண்டு. ஆனால் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளை எளிதில் மறப்பது இல்லை. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நமது அன்றாட வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கு நபராகவே சீரியல் நடிகர்கள் மாறிவிடுவது உண்டு. அவ்வகையில் சீரியலில் நடித்து நம் நினைவில் நீங்கா இடம் பிடித்த 4 நடிகர்களை காணலாம்.

ஷியாம் கணேஷ்: 25 வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் பானுப்பிரியா நடித்த சக்தி என்கிற சீரியலில் அறிமுகமானவர் ஷியாம் கணேஷ். அஜித்துடன் தீனா விஜய் உடன் யூத் போன்ற படங்களில் நடித்து  வெள்ளி திரையிலும் கால் பதித்தார். தெய்வமகள் சீரியலில்  அண்ணியாக நடித்த  சிந்து என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.

விஜய் ஆதி ராஜ்: சன் டிவியில் சித்தி நாடகத்தின் மூலம் பிரபலமான விஜய் ஆதிராஜ், அண்ணாமலை, மனைவி , எங்கிருந்தோ வந்தாள் போன்ற பல நாடகங்களிலும் நடித்து வந்தவர். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களை  குதுகலப்படுத்தினார். அமெரிக்கா மாப்பிள்ளை கேரக்டர் என்றாலே விஜய் ஆதிராஜை அணுகும் அளவிற்கு நாடகத்தில் அதிகமான கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ணி இருந்தார் விஜய் ஆதிராஜ்.

ராம்ஜி: பாலச்சந்திரரின் கையளவு மனசு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ராம்ஜி. இவர் ரமணி வெர்சஸ் ரமணி என்ற நகைச்சுவை நாடகத்தின் மூலம் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார். இன்றும் 90ஸ் கிட்ஸ் யூடிபில் ரமணி வெர்சஸ் ரமணி எபிசோடுகளை கண்டு களித்து ஆனந்தம் அடைகின்றனர். இவர் காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா மற்றும் நீ பார்த்துட்டு போனாலும் பாக்காம போனாலும்” போன்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

கணேஷ் வெங்கட்ராமன்: திரிஷாவின் அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராமன்,  உன்னை போல் ஒருவன், தனிஒருவன்  போன்ற படங்களில் நடித்து பின் சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் சீரியலில் தலை காட்ட ஆரம்பித்தார் தற்போது ஜீ தமிழ்  சேனலில் நினைத்தேன் வந்தாய் என்கிற சீரியலில் கமிட்டாகி உள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →