திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பிப்ரவரி மாதம் தியேட்டரில் படையெடுக்கும் 14 படங்கள்.. களத்தில் இறங்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

February month theatre Release Tamil Movies : ஜனவரி மாதம் அயலான், கேப்டன் மில்லர் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது. இந்நிலையில் பிப்ரவரி மாதமும் பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கிறது. அடுத்த மாதம் கிட்டத்தட்ட 14 படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு வருகிறது.

முதலாவதாக பிப்ரவரி இரண்டாம் தேதி நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிறது. ராகோ யோகேந்திரன் இயக்கத்தில் விஜய் டிவி ரக்சன், தீனா, பிரான்ஸ்டர் ராகுல், ஸ்வேதா வேணுகோபால் மற்றும் முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மறக்குமா நெஞ்சம் படம் வெளியாகிறது. மேலும் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் டெவில் படமும் அன்று வெளியாகிறது.

சுரேகா வாணி, மஞ்சுரா, சிம்ரன், அமிர்தா ஹால்டர் நடிப்பில் உருவாகி உள்ள சிக்லெட்ஸ் படம் பிப்ரவரி 2 ரிலீஸாகிறது. சந்தானம் மற்றும் ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமியும் அதே நாளில் தான் வெளியாகிறது. இதற்கு அடுத்தபடியாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி இரண்டு படங்கள் வெளியாகிறது.

Also Read : விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

முதலாவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படம் வெளியாகிறது. இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோட்டத்தில் ரஜினி நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் லால் சலாம் படத்திற்கு போட்டியாக பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் மற்றும் கௌரி பிரியா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படம் வெளியாகிறது. அடுத்ததாக பிப்ரவரி 15ஆம் தேதி மம்முட்டியின் பிரம்மயுகம் படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மிரள செய்த நிலையில் படத்தை பார்க்க ஆர்வமாக காட்டி வருகிறார்கள். மேலும் பிப்ரவரி 16ஆம் தேதி ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் சைரன் படம் வெளியாகிறது. இதே நாளில் காமெடி நடிகர் சதீஷின் வித்தைநாயகன் மற்றும் மொட்ட ராஜேந்தர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் தி பாய்ஸ் படமும் வெளியாகிறது.

மேலும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரமான 23ஆம் தேதி பைரி, காசிமேடு கேட், நிலவெல்லாம் நீதானே மற்றும் பிரித்திவிராஜ் சுகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ரணம் ஆகிய படங்கள் வெளியாகிறது. எனவே ரசிகர்கள் பிப்ரவரி மாதத்தின் விடுமுறை நாட்களை திரையரங்குகளில் சென்று செலவிடும்படி நிறைய படங்கள் வெளியாக உள்ளது.

Also Read : பருவத்திலேயே பயிர் செய்திருக்க வேண்டும்.. ரஜினி பட நடிகையை கிண்டல் செய்த பயில்வான்

Trending News