செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்க்கு தேவைப்படும் அத்தனை கோடிகள்.. கொடுக்கப் போகும் அந்த பெத்த கை யார்?

Actor Vijay : விஜய் இப்போது வெங்கட்பிரபுவின் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரமாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்ததாக விஜய்யின் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் விஜய் அரசியலில் இறங்குவதற்கான ஏற்பாடும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக அரசியல் கட்சி நடத்த பெரிய தொகை தேவைப்படும். மேலும் தளபதி சினிமாவில் சேர்த்த காசும் அரசியல் கட்சி தொடங்க போதுமானதாக இருக்காது.

ஏனென்றால் ஆரம்பமே பெரிய அளவில் எடுக்க வேண்டும் என விஜய் பல்வேறு முயற்சி செய்து வருகிறார். ஆனால் விஜய்யின் விசுவாசிகள் உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்கின்றனர். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க குறைந்தது 1500 கோடி முதல் 2000 கோடி வரை தேவைப்படுமாம்.

Also Read : ஆரம்பிக்கும் முன்பே அமுங்கி போன பதவி ஆசை.. அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய், காரணம் இதுதான்

இந்தத் தொகைக்காக சினிமாவில் பிரபல நிறுவனம் ஒன்றுடன் விஜய் கூட்டணி போட உள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த இவிவி என்டர்டைன்மென்ட் உடன் விஜய் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

குறைந்தது இரண்டு, மூன்று படங்களாவது அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு அட்வான்ஸ் தொகையை விஜய் வாங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இங்கு அது எந்த அளவுக்கு உண்மை என்பது தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

Also Read : விஜய் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா.? ஒரு ஓட்டு கூட தேறாது, எச்சரிக்கும் விசுவாசிகள்

Trending News