Actress Meera chopra to get married march at the age of 40: எஸ் ஜே சூர்யா திரைக்கதை எழுதி இயக்கி நடித்து 2005 ஆண்டு வெளிவந்த திரைப்படம் அன்பே ஆருயிரே சுருக்கமாக அ ஆ என்று இளைஞர்களால் கொண்டாடப்பட்டது இந்த திரைப்படம். குஷி, நியூ திரைப்படங்களுக்கு பின் இளசுகளால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அன்பே ஆருயிரே.
எஸ் ஜே சூர்யா பின்விளைவுகள் விமர்சனங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய திரைக்கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் பலவித எதிர்ப்புகளை கடந்து திரை கதையை எந்த ஒரு மாற்றமும் இன்றி படமாக்குவதில் அவருக்கு இணை அவரே. இதனால் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் போய்விடுவது அவரது வாடிக்கை.
“இருக்கு ஆனா இல்ல! இல்ல ஆனா இருக்கு!” என்று மாத்தி மாத்தி குழப்பி காதலை தெளிவாக விளக்கியிருந்தார் எஸ் ஜே சூர்யா. அதாவது காதலுக்குள் வரும் சந்தேகங்களால் காதல் தோற்று விடக் கூடாது என்ற உன்னத நோக்குடன் காதலர்களை சேர்த்து வைப்பது இந்த திரைப்படம். இதில் எஸ் ஜே சூர்யாக்கு ஜோடியாக நடித்தவர் மீரா சோப்ரா என்கின்ற நிலா.
Also read: அர்ஜுன் இயக்கிய லாபமும் நஷ்டமும் அடைந்த படங்கள்.. 60 வயதிலும் லியோ சித்தப்பா செய்யும் அக்கப்போரு!
இப்படத்திற்கு பின் அர்ஜுன் உடன் மருதமலை சிபிராஜுடன் லீ போன்ற படங்களில் நடித்திருந்தார் நிலா, இவர் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா அவர்களின் சகோதரி ஆவார். 40 வயதை தொட்டுள்ள நிலாவிற்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதிபாட்டோடு இருக்கும் இன்றைய தலைமுறையினர் செட்டில் ஆகவே 40 வயதை தாண்டி விடுகிறது.
அதேபோல்தான் நிலா என்கிற மீரா சோப்ரா வை, ரசிகர்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்ட போது? பதிலளித்த மீரா சோப்ரா அவர்கள், நீங்கள் கேள்விப்பட்ட மாதிரி பிப்ரவரியில் நிச்சயதார்த்தம், மார்ச்சில் கல்யாணம் எனவும் ராஜஸ்தானில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். என்னுடைய லைப் பார்ட்னரை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இவருக்காவது 40 வயது ஆன பின்பும் திருமணம் என்கிற ஒரு அற்புத நிகழ்வு வாழ்க்கையில் அரங்கேறுகிறது என்று வைத்துக் கொள்வோம் ஆனால் 45 கடந்தும் ஐம்பதை நெருங்கும் நடிகர்கள் பலர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் பெண் தேடி வருகின்றனர். காதலை அழகாக வெளிப்படுத்தியவர்களுக்கு காதல் கைகூடவில்லை என்னும்போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்கிறது.
Also read: பணம், புகழ் என எஸ் ஜே சூர்யா காட்டில் புரண்டோடும் வெல்லம்.. 2024இல் மான்ஸ்டர் கைவசம் உள்ள படங்கள்