வெறி கொண்ட வேங்கையாக மாறிய சிம்பு.. அனல் பறக்கும் STR48 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

STR48 First Look Poster: கமல் தயாரிப்பில் சிம்புவின் 48வது பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மாதக்கணக்காக எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்த நிலையில் தற்போது பட குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இது குறித்த அறிவிப்பு வந்த நிலையில் தற்போது சிம்பு வெறிகொண்ட வேங்கையாக ஆக்ரோஷமாக இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் சிம்பு இரட்டை வேடத்தில் எதிர் எதிராக முறைத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறார்.

ஏற்கனவே இப்படம் பீரியட் கதை என்ற தகவல் மீடியாவில் கசிந்தது. அதேபோல் சிம்பு இரு வேடங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கப் போகும் தகவலையும் சினிமா விமர்சகர்கள் பகிர்ந்திருந்தனர். தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதிலும் போர் நடப்பது போன்று இருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்காக சிம்பு கடந்த பல மாதங்களாகவே கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதேபோல் இயக்குனரும் படம் எதிர்பார்த்ததற்கு மேலாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருந்த நிலையில் இந்த போஸ்டர் வேற லெவல் ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கும் சிம்பு இன்றே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →