புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

முரட்டு சிங்கிள் சிம்புவுக்கு 41 வயசு ஆயிடுச்சா.! ஆல் இன் ஆல் அழகு ராஜாவின் சொத்து மதிப்பு

Simbu’s Networth: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் சிம்பு இன்று தன்னுடைய 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கமல் தயாரிப்பில் உருவாகும் சிம்புவின் 48வது படம் தான் ரசிகர்களை அதிக எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே இதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த சிம்பு தற்போது படப்பிடிப்பிற்கு ஆயத்தமாகியுள்ளார்.

அதை குறிப்பிடும் வகையில் நேற்று பட குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது. மேலும் பீரியட் கதையாக உருவாகும் இப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடிப்பது போஸ்டர் மூலம் உறுதியாகி இருந்தது.

Also read: வெறி கொண்ட வேங்கையாக மாறிய சிம்பு.. அனல் பறக்கும் STR48 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய விவரம் கசிந்துள்ளது. அதன்படி சொகுசு வீடு, ஆடம்பர பங்களா என வாழ்ந்து வரும் சிம்பு தற்போது ஒரு படத்திற்கு 15 முதல் 20 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

அதன் அடிப்படையில் இவரிடம் மொத்தமாக 130 முதல் 150 கோடி வரை சொத்துக்கள் இருக்கிறது. அதில் இவரிடம் இருக்கும் கார்களின் மதிப்பே 10 கோடியை தாண்டும் என்கின்றனர். அந்த வகையில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இயக்கம், பாடல், நடிப்பு என கலக்கிக் கொண்டிருக்கும் இந்த முரட்டு சிங்கிள் தற்போது ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

Also read: சிம்புவை நம்பி கடைசி வரை எடுக்க முடியாமல் போன 5 படங்கள்.. 25வது படத்தை கைவிட்ட கெட்டவன்

Trending News