ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அஜித் இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே ரஜினி தான்.. 14 வருடங்களுக்கு முன் தூபம் போட்ட தலைவர்

Rajini is the main reason why Ajith is like this: அஜித்தை பொருத்தவரை நடிப்பது என்னுடைய வேலை அதில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன் என்பதற்கு ஏற்ப இருக்கக்கூடியவர். முக்கியமாக எந்த ஒரு ரசிகர் மன்றமும் வேண்டாம், என்னை யாரும் தலையில் வைத்து கொண்டாட வேண்டாம் என்று சொல்லக் கூடியவர். அத்துடன் எந்த செய்தியாளர்களையும் சந்திப்பதில்லை, படங்களின் பிரமோஷனுக்கு கூட கலந்து கொள்வதில்லை.

அந்த வகையில் படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு கமுக்கமாக இருக்கிறார். அதனாலயே இவரைப் பற்றி பல விஷயங்கள் வெளி வருவதில்லை. ஆனால் ஆரம்பத்தில் அஜித் இப்படி கிடையாது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பேசினாலும் பத்திரிகையாளர்களை சந்தித்தாலும் மனதில் தோன்றிய விஷயங்களை பட்டென்று பேசக்கூடியவர்.

அதனால் தான் அப்பொழுது இவர் மீது தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது. அதன் பிறகு தான் ரஜினி ஒரு முறை இவரை பார்த்து சந்தித்து பேசி இருக்கிறார். அதிலிருந்து அஜித் நடவடிக்கைகள் மொத்தமாகவே மாறிவிட்டது. தற்போது அஜித் இப்படி நடந்து கொள்வதற்கு முக்கிய காரணமே ரஜினி தான். அதாவது 2010 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் அசல் படம் வெளியானது.

Also read: அஜித்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? வீரம் படத்துக்காக அவஸ்தைப்பட்ட விநாயகம்

இப்படத்தின் பட பூஜையின் பொழுது ரஜினி இவரை நேரில் சந்தித்து பல அட்வைஸ்களை கொடுத்திருக்கிறார். அதாவது நாம் கேரியரில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில விஷயங்களை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. அப்படி இருந்தால் மட்டும்தான் நம்மளால் அடுத்தடுத்த விஷயங்களில் முன்னேற்றத்தை காட்ட முடியும்.

அதனால் அதனை நோக்கி மட்டும் தான் நம்மளுடைய பயணம் இருக்க வேண்டும். மற்ற விஷயங்களில் நாம் கருத்துக்களை வெளியிட்டால் அதுவே நமக்கு பிரச்சினையாகி விடும். நம்மளால் சாதிக்கவும் முடியாது என்று பல விஷயங்களை அஜித்திற்கு ரஜினி எடுத்துரைத்திருக்கிறார். இப்படி இவர் சொன்னதற்கு முக்கிய காரணம் 2010 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அப்பொழுது அதில் கலந்து கொண்ட அஜித் மேடையில் எந்தவித பயமும் இன்றி சினிமா பிரபலங்களை  கட்டாயப்படுத்தி இது போன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூடாது என்று வெளிப்படையாக பேசி விட்டார். அதில் கலந்து கொண்ட ரஜினியும் அஜித்தின் சொன்னதுக்கு தில்லாக எழுந்து அவருடைய பாராட்டை தெரிவித்தார்.

இருந்தாலும் ஒரு பொது மேடையில் சினிமா பிரபலங்களாக இருக்கும் நாம் இப்படி பேசக்கூடாது என்பதை அறிவுறுத்தும் விதமாக பல அட்வைஸ்களை ரஜினி கொடுத்திருக்கிறார். இப்படி 14 வருடங்களுக்கு முன் அஜித்திற்கு ரஜினி தூபம் போட்டதால் தான் தற்போது வரை எந்த விஷயத்திலும் கலந்து கொள்ளாமல் அஜித் தனி வழியாக சுற்றி வருகிறார்.

Also read: அஜித்தின் மூளையை சலவை செய்யும் சிறுத்தை சிவா.. வேறு வழி இல்லாமல் கிரீன் சிக்னல் கொடுக்கப் போகும் ஏகே

Trending News