புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

90’ஸ் கனவுக்கன்னி சிம்ரனின் 4 தரமான ஹிட் படங்கள்.. இடுப்பழகி தான் வேணும்னு அடம் பிடித்த அஜித்

 4 hit films of 90’s dream girl Simran: இஞ்சி இடுப்பழகியான பஞ்சாப் மாடல் சிம்ரன், ஒன்ஸ்மோர் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிறப்பான பாவனைகள் மூலம் உணர்ச்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தி, நடிக்கிறார் என்று தெரியாத அளவு கதாபாத்திரத்துடன் ஒன்றி மிரளச் செய்வதில் சிம்ரனுக்கு  இணையில்லை.

தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பிசியாக இருந்த வண்ணம் கால்ஷீட் கிடைக்க முடியாமல் இயக்குனர்கள் இவர் வீட்டு வாயிலில் தவமாய் தவம் கிடந்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவரும் சிம்ரனின் திறமையை பார்த்து வியந்த வண்ணம் தங்களது படங்களுக்கு சிம்ரன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தனராம்.

துள்ளாத மனமும் துள்ளும்:  இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திரைப்படத்தில் ருக்குவாக நடித்து வெறுப்பையும் காதலையும் ஒருசேர வெளிப்படுத்தி இருந்தார் சிம்ரன். எவர்கிரீன் மூவியாக இன்றுவரை அடிக்கடி தொலைக்காட்சிகளில் போடப்படும் இந்த படத்திற்கு 90 ஸ் கிட்ஸ் அடிமை என்றே சொல்லலாம்.

Also read: சிம்ரன் வில்லியாக மிரட்டிய 5 படங்கள்.. பொறாமையில் லைலாவை படாத பாடு படுத்திய பானு

பிரியமானவளே: 2000ஆண்டு தீபாவளியின் போது வெளிவந்த திரைப்படத்தில் குடும்பத்தை தாங்கும் புரட்சி பெண்ணாகவும், கணவனின் அன்பை பெற துடிக்கும் மனைவியாகவும் விஜய்யும் சிம்ரனும் நடிப்பில் பின்னி இருந்தனர். இப்படம் வெளிவந்த புதிதில் காண்ட்ராக்ட் கல்யாண விஷயத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்த போதும் துணிச்சலாக நடித்திருந்தார் சிம்ரன்.

அவள் வருவாளா:  சேலையில வீடு கட்டவா என அஜித்தும் சிம்ரனும் அடித்த லூட்டியை மறக்க முடியுமா? அஜித் இந்த படத்தில் கமிட் ஆகும்போது நாயகியாக சிம்ரன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தாராம். படத்தின் கதை முழுவதுமே சிம்ரனை சுற்றியே  பின்னப்பட்டு சுவாரசியமாக அமைந்திருந்தது. படத்தில் நடித்த அஜித், சிம்ரன் இருவருக்குமே இப்படம் வேற லெவலில் ஹிட் கொடுத்தது எனலாம்.

வாலி: அஜித், சிம்ரன், எஸ் ஜே சூர்யா இவர்கள் மூவருக்குமே இந்த படம் மிகவும் ஸ்பெஷல் ஆன படம் தான்.  “நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை” என இன்று கேட்டால் கூட 90கிட்ஸ்  குதுகலம் ஆகி விடுவார்கள். இப்படத்தில் இடம்பெறும் காட்சி ஒவ்வொன்றிலும் சிம்ரன் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார். கடைசி காட்சியில உன்ன என்னால கொல்ல முடியாது என்று அஜித்தை பார்த்து கூறும் போது  படம் பார்க்கும் அனைவரின் அனுதாபத்தையும் சம்பாதித்து கைதட்டல் வாங்கினார் சிம்ரன்.

Also read: நீதான் என் உயிர் என்று திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட 5 ஜோடிகள்.. சதியால் பிரிந்து போன சிம்ரன்

- Advertisement -spot_img

Trending News