சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ரிலீசுக்கு முன்னாடியே லால் சலாம் தோல்விதான்.. மொத்தமாக சோலியை முடித்த ப்ளூ சட்டை விமர்சனம்

Lal Salaam-Blue Sattai Review: பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீசானாலே சூர்யவம்சம் சின்ராசு போல ப்ளூ சட்டை மாறனை கையிலயே பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு படத்தை வச்சு செய்வது தான் இவருடைய ஒரே நோக்கமாக இருக்கும்.

அப்படித்தான் லால் சலாம் ரிலீசுக்காக ப்ளூ சட்டை மாறன் ரொம்பவும் ஆவலோடு காத்திருந்தார். அந்த வகையில் நேற்று வெளியான படத்தை அவர் தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்து சோலியை முடித்து விட்டிருக்கிறார்.

அதில் 90களில் கதை நகர்வது போல் காட்டப்பட்டிருக்கும். அதை குறிப்பிட்டு இருக்கும் ப்ளூ சட்டை மாறன் படத்தின் மேக்கிங் சரியில்லை, இந்த காலகட்டத்தில் எடுத்தது போல் இருக்கிறது. 90 காலகட்டம் போல் நம்மால் உணர முடியவில்லை. அதிலும் ஹீரோவின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை சொல்லவும் முடியவில்லை.

Also read: லால் சலாம் படத்தில் இவ்வளவு குறையா?. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம்

அந்த கேரக்டர் விளையாட்டில் கவனம் செலுத்துகிறதா? இல்லை காதல் செய்கிறதா? இல்லை ஊருக்கு நல்லது செய்கிறதா? என எதுவும் புரியவில்லை. குறிப்பாக முட்டு சந்தில் ஹீரோவுக்கு வைத்திருக்கும் அந்த சண்டை காட்சி எதற்கு என்றே தெரியவில்லை.

ரஜினி வரும் சண்டைக்காட்சியும், தேர் திருவிழா காட்சியும் தான் ஓரளவுக்கு ஓகே ரகமாக இருக்கிறது. மற்றபடி முட்டு சாந்திலும் தெரு முக்கிலும் கேமராவை வைத்து சுற்றி சுற்றி படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் இது லோ பட்ஜெட் படம் தான் என செமயாக கலாய்த்துள்ளார்.

மேலும் சில படங்கள் வெளிவந்த பிறகு தான் ஃப்ளாப் ஆகும். ஆனால் லால் சலாம் வெளிவருவதற்கு முன்பே ஃப்ளாப் என்று தெரிந்து விட்டது. தற்போது கதையும் அப்படித்தான் இருக்கிறது என முடிந்த அளவு படத்தை பங்கம் செய்து சோலியை முடித்துள்ளார் ப்ளூ சட்டை.

Also read: விஜய், விஷாலின் பதவி ஆசை.. சூப்பர் ஸ்டார் கொடுத்த நெத்தியடி பதில்

- Advertisement -spot_img

Trending News