வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

2024ல் சம்பளத்தை உயர்த்திய 5 புது ஹீரோக்கள்.. ஜெட் வேகத்தில் போகும் ராஜாக்கண்ணு

சில நடிகர், நடிகைக்கு 2024 ஆம் ஆண்டு பொக்கிஷமான வருடமாகிவிட்டது. அப்படி இந்த வருடத்தில் வெற்றி படங்களை கொடுத்ததால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று, தங்களின் சம்பளத்தை 5 புது ஹீரோக்கள் அதிகப்படுத்தி இருக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் விழி பிதுங்கி நின்றாலும், இந்த ஹீரோக்களின் படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

கடந்த ஒன்பதாம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்று கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய படம் தான் லால் சலாம். இந்த படத்தில் ரஜினியுடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் தங்கள் சம்பளத்தை அடுத்த படத்தில் டபுள் மடங்கு உயர்த்தி விட்டனர்.

லால் சலாம் படத்திற்கு விஷ்ணு விஷால் 4 கோடி சம்பளம் வாங்கினார். ஆனால் அவர் அடுத்து கமிட் ஆகி இருக்கும் படத்திற்கு 7 கோடி சம்பளம் கேட்கிறார். அதேபோல் தான் விக்ராந்த், லால் சலாம் படத்திற்கு 70 லட்சம் சம்பளம் வாங்கினார், அடுத்த படத்தில் அவருடைய சம்பளம் 1.5 கோடியாம்.

Also Read: லைக்கா தலையில் துண்டை போட்ட லால் சலாம்.. ஸ்கோர் செய்த லவ்வர், 4ம் நாள் வசூல் நிலவரம்

ஐந்து ஹீரோக்களின் சம்பளம் எகிறியது

இவர்களைப் போலவே குட் நைட் படத்தின் நாயகன் மணிகண்டனின் லவ்வர் படம், லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆன அதே தினத்தில் தான் வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து கொண்டு இருக்கின்றனர். மல்டி டேலண்டரான மணிகண்டன் லவ்வர் படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை 2 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார்.

மேலும் ஹரிஷ் கல்யாண், பார்க்கிங் படத்தில் 2.5 கோடி சம்பளம் வாங்கினார், அடுத்த படத்தில் இவருடைய சம்பளம் 4 கோடியாம், மேலும் பிக் பாஸ் புகழ் கவின் டாடா படத்திற்குப் பிறகு 2 கோடி சம்பளம் கேட்கிறார், இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து 2024ல் சரசரவென தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரம்.. மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் சூப்பர் ஸ்டார்

Trending News