The producer who invested 4 crores and took 20 times profit: பிரம்மாண்டமாக படம் இருக்க வேண்டும் என்று அதிக செலவு செய்து போட்ட காசை கூட எடுக்க முடியாமல் பல படங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் படம் எடுக்கிறது பெரிய விஷயம் இல்ல. கம்மியான பட்ஜெட்டிலும் கல்லாவை நிரப்ப வேண்டும் என்று நல்ல கதைகள் அமைந்த படங்களும் இருக்கிறது.
இதை தான் மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு ஏற்ப சின்ன பட்ஜெட் படங்களுக்கும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது. அப்படி ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த ஒரு படம் அனைவரையும் அதிக அளவில் தாக்கி விட்டது. இந்த படத்திற்கு பிறகு தான் அந்த ஹீரோயினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும், ரசிகர்களும் குவிய ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பிரேமம். இப்படத்தில் சாய் பல்லவி மலர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்து விட்டார். இவருடைய சிரிப்புக்கும், நடிப்புக்கும், நடனத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள்.
Also read: காதல் கதைகள் தோத்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள்.. விஜய்யின் சோகம் கூட சுகமானது
அப்படிப்பட்ட இப்படத்தை எடுப்பதற்கு வெறும் 4 கோடி பட்ஜெட் மட்டுமே ஆனது. கம்மி பட்ஜெட்டில் உருவாக்கிய இப்படம் 80கோடி வசூலை பெற்று தயாரிப்பாளர் கல்லாக கட்டும் அளவிற்கு லாபத்தை கொடுத்து விட்டது. இப்படத்தின் தயாரிப்பாளரான அன்வர் ரஷீத் ஏற்கனவே பெங்களூர் டேஸ், ட்ரான்ஸ் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.
ஆனால் அதன் பிறகு எங்கே போனார் என்று தெரியாத அளவிற்கு கிடைத்த லாபத்தை வைத்துக் கொண்டு சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். மேலும் இப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிரபலங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டிக்கு இந்த படம் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருந்திருக்கிறதாம்.
அதனால் தான் கிட்டத்தட்ட பத்து முறை பார்த்து ரசித்ததாக மம்முட்டி அளித்த பேட்டியில் அவரே சொல்லி இருக்கிறார். எத்தனையோ படங்கள் இருந்தாலும் சில படங்கள் மட்டும் தான் திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காது என்பதற்கு ஏற்ப ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த லிஸ்டில் பிரேமம் படம் எப்பொழுதுமே ஒரு தனி இடத்தைப் பெற்று விட்டது.