சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

வசூலில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ரஜினிக்கு டஃப் கொடுத்த 3 படங்கள்.. 90 களில் கேப்டன் செஞ்ச சம்பவம்

Rajini : ரஜினி படங்கள் இப்போது 500 கோடி வசூல் செய்வது சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தான் 80,90களில் அசால்டாக ரஜினியின் மூன்று படங்கள் 4 கோடி மேல்ஸகலெக்ஷன் செய்து இருக்கிறது. இந்நிலையில்
தனிகாட்டு ராஜாவாக இருந்த ரஜினிக்கு டஃப் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

அதாவது ரஜினியின் ராஜாத்தி ராஜா, ராஜா சின்ன ரோஜா மற்றும் படிக்காதவன் ஆகிய படம் 4 கோடி வசூல் செய்தது. அதற்கு டஃப் கொடுத்து 80களில் விஜயகாந்த் அதிக வசூல் செய்த படங்களை இப்போது பார்க்கலாம். 1988 ஆம் ஆண்டு தேவராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் செந்தூரப்பூவே.

இப்படத்தில் ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடித்த நிலையில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி மூன்று கோடி வசூல் செய்திருந்தது. பி வாசு இயக்கத்தில் இளையராஜா இசையில் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த், சோபனா நடிப்பில் வெளியான படம் தான் பொன்மனச் செல்வன். இப்படம் அப்போது இரண்டு கோடி வசூல் செய்திருந்தது.

Also Read : த்ரிஷாவை தொடர்ந்து ரஜினி ஹீரோயினையும் கொச்சைப்படுத்திய மன்சூர்.. கொந்தளிப்புடன் பேசிய வில்லன்

இதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதோடு மட்டுமல்லாமல் இது விஜயகாந்த்தின் நூறாவது படம்.

மேலும் கேப்டன் பிரபாகரன் படம் அப்போது நான்கு கோடி வசூல் செய்திருந்தது. இவ்வாறு ரஜினியை ஓரம் கட்டும் அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் இப்போது சினிமாவில் அதிக வசூல் தரும் படங்களை கொடுத்து வந்துள்ளார். அரசியல் நுழைவினால் சினிமாவில் கேப்டனால் அதன் பின்பு அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போனது.

Also Read : ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

- Advertisement -spot_img

Trending News