Vignesh Shivan : கடந்த சில நாட்களாக சென்னையில் எங்கு பார்த்தாலும் நீங்க ரோடு ராஜாவா என்ற விளம்பர பலகை இருப்பதை காண முடிகிறது. அப்படி என்றால் என்ன என்று பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்ப்பட்டிருந்தது. சாலை விதிமுறைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் உருவாக்கிய விளம்பரம் தான் இது.
இப்போது பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் இந்தக் கூட்ட நெரிசலால் அதிக சாலை விதி மீறல்கள் நடந்து வருகிறது. இதற்காக எவ்வளவு தான் டிராபிக் போலீஸ் முயற்சி செய்தாலும் தொடர்ந்து பொதுமக்கள் விதிமீறல்களை செய்து தான் வருகிறார்கள்.
இதனால் யாருக்கு ஆபத்து, இதை எப்படி தடுப்பது என்று விளம்பரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தனர். அதனால் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு விளம்பரமும் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த விளம்பரத்தில் சாந்தனு நடித்துள்ளார்.
அதாவது சென்னையில் விதியை மீறி யாராவது பயணித்தால் அவர்கள் மரியாதை கொடுத்து போட்டோ எடுக்க வேண்டும். அதை x தளத்தில் ரோடுராஜா என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட வேண்டும். உடனடியாகவே சாலை விதியை மீறிய நபர்கள் மீது போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
அதாவது ரோட்டில் போகும் ஒவ்வொரு வருமே ராஜா தான். இரு சக்கர வாகனத்தில் போகும்போது தலைக்கவசம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சாலை விதிகளை பின்பற்றுவதும் மிக முக்கியம். இதன் மூலம் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.