செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

தேவயானி கணவர் இயக்கிய 4 படங்கள்.. அஜித்துக்கு கொடுத்த சூப்பர் ஹிட்

4 films directed by Devayani’s husband Rajakumaran: காதலுக்கு அழகும் அந்தஸ்து ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வெற்றிகரமாக தனது மண வாழ்க்கையை தொடர்ந்து வரும் நட்சத்திர ஜோடிகள் தேவயானி மற்றும் ராஜகுமாரன். விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி நடித்த சூரிய வம்சம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன்.

வசனம், உச்சரிப்பு,நடிப்பு இவற்றை சொல்லிக் கொடுத்த ராஜகுமாரனின் மீது தனி ஒரு அபிமானம் ஏற்படவே, “நீங்கள் இயக்குனராகும் பட்சத்தில் உங்களிடம் கதை கேட்காமலேயே நடிப்பேன்” என்று  ராஜகுமாரனிடம் கூறினாராம் தேவயானி. சொன்னது மட்டுமல்லாமல் ராஜகுமாரனின் இயக்கிய அத்தனை படங்களிலும் ஹீரோயினாக தோன்றி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் தேவயானி. ராஜகுமாரன் இயக்கிய 4 திரைப்படங்கள் இதோ,

விண்ணுக்கும் மண்ணுக்கும்: தேவயானியின் நிஜ வாழ்வை அப்படியே பிரதிபலிப்பது போல் ராஜகுமாரன் இயக்கிய திரைப்படத்தில்  தேவயானி உடன் விக்ரம், சரத்குமார், குஷ்பூ போன்றோர் நடித்திருந்தனர். இதில் தேவயானியை மட்டுமே ராஜகுமாரன் அதிகம் போக்கஸ் செய்ததாகவும் சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களை வெகு நேரம் காக்க வைத்ததற்காகவும் இயக்கத்தின் போது பெரும் பரபரப்பு நிகழ்ந்தது என்பதும் தகவல்.

Also read: சரத்குமார் உருகி உருகி காதலித்த 4 நடிகைகள்.. அவ என் ஆளுன்னு அஜித் போட்டா சண்டை தெரியுமா?

திருமதி தமிழ்: தேவயானியின் 75 ஆவது படமாக நடிகராக இயக்குனர் ராஜகுமாரனுக்கு முதல் படமாக அமைந்திருந்தது திருமதி தமிழ். கணவன் மனைவி உறவை உயர்த்திக் காட்டுவதில் கொஞ்சம் சரிந்து இருந்தார் ராஜகுமாரன். படத்தில் நடித்த மலேசியா வாசுதேவனுக்கு இது கடைசி திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீ வருவாய் என: ராஜகுமாரன் அறிமுக இயக்குனராக 1999  ஆண்டு வெளிவந்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் “நீ வருவாய் என” திரைப்படத்தில் பார்த்திபன், அஜித், தேவயானி போன்றோர் நடித்தனர். முக்கோண காதல் கதையான இத்திரைப்படத்தின் சிறந்த கதாசிரியருக்கான விருதை ராஜகுமாரன் தட்டி சென்றார். அஜித் சில காட்சிகளே வந்திருந்தாலும் அழுத்தமான கதாபாத்திரமாக அவரது கேரியரில் ஹிட் படமாக அமைந்தது நீ வருவாய் என!

காதலுடன்:  தேவயானியின் தயாரிப்பில் ராஜகுமாரன் இயக்கத்தில் தேவயானி, முரளி, அப்பாஸ் நடித்திருந்த இந்த திரைப்படம் 2003 ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்தது. மேலும் காதலுடன் திரைப்படம் சிறந்த குடும்ப திரைப்படத்திற்கான தமிழக அரசின் விருதை வென்றது.

Also read: ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

Trending News