திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலா இயக்கத்தில் நடித்ததால் தான் கேரியரே போச்சு.. டாக்டர் நடிகரோட அப்பா இப்ப வர போடும் சண்டை

Director Bala: பாலா இயக்கத்தில் யார் நடித்தாலும் அவருடைய கேரியருக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விடும். ஏனென்றால் எதார்த்தமான கதையுடன், தத்ரூபமான நடிப்பு வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடு செய்து கதாபாத்திரங்களை செதுக்க கூடிய அளவிற்கு வச்சுசெய்யக் கூடியவர் தான் இயக்குனர் பாலா. அப்படிப்பட்ட இவருடைய கையில் சிக்கிய அனைவருமே நூடில்ஸ் ஆகி விடுவார்கள்.

ஆனாலும் கடைசியில் ரிசல்ட் நல்லதாகவே முடியும். அந்த வகையில் ஒரு வெற்றிக்காக பல வருடங்களாக போராடி வந்த நடிகர் இவரிடம் சிக்கியதால் தான் அவருடைய சினிமா கேரியரே வெளிச்சமாகி இருக்கிறது. அவர் வேறு யாருமில்லை சேது படத்தின் மூலம் திருப்புமுனையாக வெற்றி கிடைத்த நடிகர் விக்ரம் தான். அதன் பின்பு மறுபடியும் இவர்களுடைய கூட்டணியில் பிதாமகன் வெற்றி படமாக சாதனை படைத்தது.

அதனாலயே இயக்குனர் பாலா மீது விக்ரமுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அந்த வகையில் தனக்கு எப்படி சினிமாவில் ஒரு பிரகாசத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல தன் மகனுக்கும் ஒரு பிள்ளையார் சுழி போட்டு வைக்க வேண்டும் என்று இயக்குனர் பாலா இயக்கத்தில் தன் மகனை நடிக்க வைத்தார்.

Also read: இருக்கும் இடம் தெரியாமல் போன பாலா பட முரட்டு வில்லன்.. முடங்கி போய் இருக்கும் விஷாலின் நண்பர்

அப்படித்தான் துருவ் விக்ரம் வர்மா படத்தில் நடித்தார். ஆனால் அப்பாவுக்கு கை கொடுத்த ட்ரிக்ஸ் மகனுக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. வர்மா படத்துக்கு அப்புறம் துருவ் விக்ரமுக்கு பட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இதனால் விக்ரம் எப்படியாவது தன் மகனை சினிமாவில் நிலைநிறுத்தி காட்ட வேண்டும் என்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படத்தில் போராடி ஒரு வாய்ப்பை வாங்கி கொடுத்தார்.

ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதற்கு ஏற்ப விக்ரம் நினைத்தது அனைத்தையும் தவிடு பொடியாக்கும் அளவிற்கு மகான் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமுக்கு எந்த ஒரு வாய்ப்புமே வராமல் போய்விட்டது. கிட்டத்தட்ட மகான் படம் வந்து இரண்டு வருஷம் ஆச்சு ஆனால் இன்னும் அவருக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

இதற்கு இடையில் பாலா வேற துருவ் விக்ரமை வைத்து புது முயற்சியை எடுத்ததால் மொத்தமாகவே அவருடைய கேரியர் சரிந்து போய்விட்டது. பாலா எப்படியாவது தன் மகனை வளர்த்து விடுவார் என்று எதிர்பார்த்தால் மொத்தமாகவே கவுக்கும் அளவிற்கு தன் மகனை வைத்து டெஸ்ட் பண்ணி விட்டாரே என்று இப்ப வரை புலம்பிக்கொண்டு பாலாவிடம் சண்டை போட்டு தான் வருகிறார்.

Also read: அஜித்துக்கு செட்டே ஆகாத 4 இயக்குனர்கள்.. பாலாவுக்கு பின் கடும் தலைவலி கொடுத்தவர்கள்

Trending News