திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியின் கொஞ்சம் நெஞ்ச நிம்மதியையும் கெடுத்து விட்டு ஐஸ்வர்யா.. அஜித் வரை சென்ற பஞ்சாயத்து

Rajini – Ajith : சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றார். இந்நிலையில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இப்போது வசூல் ரீதியாக பெருத்த அடி வாங்கி இருக்கிறது.

அதோடுமட்டுமல்லாமல் லால் சலாம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தோல்விக்கு காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் என்று கூறி வருகிறார்கள். அதாவது ரஜினி சங்கி இல்லை என ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கூறியிருந்தார். இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க படத்திற்கு நெகட்டிவ் விமர்சனமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு ரஜினியின் கொஞ்சம் நெஞ்சம் நிம்மதியும் ஐஸ்வர்யா தொலைத்து விட்டார். இந்த படத்தால் இப்போது அஜித்தின் படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விடாமுயற்சி படம் தொடங்கியதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை சுற்றிக்கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் இப்போது படப்பிடிப்பு நிற்கும் அளவுக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது. மகிழ்த்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Also Read : லால் சலாம் படத்தால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. கப்பு சிப்பின்னு வாய மூடிட்டு வேடிக்கை பார்க்கும் லைக்கா

ஐஸ்வர்யாவை நம்பி லால் சலாம் படத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டை லைக்கா போட்டுவிட்டது. எதிர்பார்த்த அளவு லாபம் எடுக்காததால் இப்போது லைக்கா கைவசம் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு உள்ளது.

அதன்பிறகு லைக்கா பணம் ரெடி பண்ணிய பிறகு தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்குமாம். ஐஸ்வர்யாவால் ரஜினிக்கு தான் தலைவலி என்றால் இப்போது அஜித்தும் பிரச்சனையை சந்தித்து வருகிறார். ஆகையால் விடாமுயற்சி படத்திற்கு எப்போது தான் விமோசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : அஜித்தை பற்றி தப்பா டமாரம் அடிக்கும் கூட்டம்.. ஒதுங்கிக் கொள்ளச் சொல்லும் தயாரிப்பாளர்

Trending News