வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

சினிமாவை காலி பண்ணும் கவின் மணிகண்டனின் பேராசை.. கெத்து காட்டி கெட்டுப்போகும் சினிமா கலாச்சாரம்

Actors Kavin and Manikandan’s asking high salary is in crores: தமிழ் சினிமாவில்  திறமையை தாண்டி நேரமும் காலமும் வாய்த்தால் மட்டுமே  கலைஞனின் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. சினிமா என்னும் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொருவரும் தன் முதல் வெற்றியை பதிவு செய்யவே பல வருடங்களாக காத்திருக்கின்றனர். வெற்றி பெற்று விட்டால் அவர்கள் தான் கெத்து. அவர்கள் வைப்பது தான் சம்பளம்.

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்காகவே தவம் கிடந்து பல கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு பெற்றவர்களே அதிகம். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களுக்கு கூட கலைத்துறையில் ஈசியாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது.வந்த வாய்ப்பை தக்க வைப்பதில் தான் அவர்களின் திறமையும் தகுதியும் அடங்கியிருக்கிறது.

இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரின் வியாபார உத்தி என்பது தன்னை மூலதனமாக்கி லாபத்தில் பெருமளவு வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். அதாவது படம் ஹிட்டு அடித்தாலும் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை பட்ஜெட்டில் பெருமளவு தொகை அவர்களது சம்பளமாக வேண்டும் என்பதே. அதிக சம்பளமே முன்னணி நடிகர் யார் என்பதை தீர்மானிப்பதால் இந்த நிலைமை தொடர்கிறது.

Also read :பணத்தாசையில் வீணா போகும் கவின்.. ஒரு படம் ஹிட்டுக்கு இவ்வளவு ஹெட் வெயிட்டா?

நல்ல திரைக்கதையுடன் வரும் படங்கள் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் பெயர் வாங்கி கொடுத்து முன்னேற, தயாரிப்பாளர்களோ தலையில் துண்டை போட்டு அதே இடத்தில் உட்கார்ந்து விடுகின்றனர். இந்த கலாச்சாரத்தை தான் இன்றைய இளம் நடிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டாடா மற்றும் குட்நைட் படத்தின் நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் இந்த படங்களின் வெற்றிக்கு பின் தனது  மார்க்கெட்டை உயர்த்தி விட்டனர். மணிகண்டன் 2 கோடியும் கவின் 5 கோடியும் கேட்டு தயாரிப்பாளர்களிடம் டிமாண்ட் வைக்கின்றனர்.கவின் மற்றும் மணிகண்டன் இருவரின் கைவசமும் அடுத்த ஒரு வருடத்திற்கு பிசியாகும் நிலையில் ஏகப்பட்ட படங்கள்.

முன்னணி நடிகர்கள் வருஷத்துக்கு ஒரு படம் என அதிக சம்பளத்துடன் நடிக்கும் நிலையில், வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி கெத்து காட்டுவதால் 90% நடைபெற்ற படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று பத்து சதவீதம் கூட நடக்க முடியாமல் திரைத் துறையே தள்ளாடி வருகிறது. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் அல்ல என்பது மட்டுமே நிச்சயமான உண்மை.

Also read : 4 ஹீரோக்கள் எடுத்த முடிவால் நம்பர்-1 ஹீரோவாக வரப்போகும் SK.. ஜாக்பாட்னா இப்படி அடிக்கணும்

- Advertisement -spot_img

Trending News