சிம்புவை வைத்து புது பிளான் போடும் கமல்.. இதைத் தவிர எஸ்டிஆர்-க்கு வேற வழியே இல்ல

Simbu: சிம்பு அவருடைய வாலிப வயதில் பண்ணாத சேட்டைகளும் இல்லை. சிக்காத சர்ச்சைகளும் இல்லை. அந்த அளவிற்கு கிசுகிசுக்களில் இவருடைய பெயர் அடிக்கடி டேமேஜ் ஆகி கொண்டே வந்தது.

அதன்பின் போகப்போக பக்குவம் ஆனதால் புத்திக்கு எட்டியபடி கொஞ்சம் மெச்சூடாகவே நடக்க ஆரம்பித்தார். அதனாலயே படப்பிடிப்புக்கு எந்தவித பிரச்சனையும் பண்ணாமல் போனார்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த படங்கள் ஹிட் ஆகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இதனால் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்து விடலாம் என்று பிளான் பண்ணினார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு

அதற்கேற்ற மாதிரி கமல் இவரை வைத்து ஒரு படத்தை பண்ணலாம் என்று கூட்டணி அமையப்பட்டது. அதாவது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் ஒரு பீரியட் படம் உருவாக இருந்தது.

இதற்கான முயற்சியில் இறங்கியதால் சிம்பு அவருடைய உடல் நிலையை அதற்கு ஏற்ற மாதிரி எக்சைஸ் பண்ணி மெருகேற்றி வைத்திருந்தார். ஆனால் இப்பொழுது வரை இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது.

அந்த வகையில் இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பேச்சுக்கள் வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் இப்படத்திற்காக எஸ்டிஆர் கிட்டத்தட்ட ஒர்க் அவுட் பண்றேன்னு பேரில் ஒரு வருடத்தை வேஸ்ட் பண்ணி இருக்கிறார்.

இவர் வேஸ்ட் பண்ண இந்த வருடத்திற்குள் புது புது ஹீரோக்கள் வந்துவிட்டனர். இதனால் சிம்பு என்ன பண்ணுவது என்று தெரியாமல் நொந்து போய் இருக்கிறார். இன்னொரு பக்கம் கமல் சிவகார்த்திகேயனை வைத்து தயாரிப்பில் பிஸியாக இருப்பதால் இவரை கண்டுக்கவே இல்லை.

கமல் நடிக்கும் தக் லைஃப்

அதனால் இப்போதைக்கு சிம்புவை ஜில் பண்ண வேண்டும் என்ற நினைப்பில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்.

ஏற்கனவே கமலுடன், ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

அதனால் இவருக்கு பதிலாக சிம்புவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு முன்னாடி சிம்புவை தான் நடிக்க வைப்பதாக இருந்தது.

அந்த நேரத்தில் கமல் நான் சிம்புவை வைத்து வேறொரு படத்தை தயாரிக்கப் போகிறேன் அதனால் இந்த படத்தில் நடித்தால் கொஞ்சம் க்ளாஸ் ஆகும் என்று சொல்லி வேண்டாம் என மறுத்து விட்டார். ஆனால் இப்பொழுது கமலுக்கும் வேறு வழி இல்லை, சிம்புவுக்கும் வேற வழியில்லை.

அதனால் கமல் கூப்பிட்டதும் இந்த சான்ஸ் ஆவது கிடைத்ததே என்று தலையை ஆட்டிவிட்டார். இந்த வாய்ப்பின் மூலமாவது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கூடி வருமா என்று சிம்பு விட்டத்தை பார்த்துக்கொண்டு வருகிறார்.