Actor Dhanush : தனுஷ் இப்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் ஒரு தரமான ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கேப்டன் மில்லர் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. ஆனாலும் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராயன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக மலையாள இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் இணைந்துள்ளனர். இப்போது சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் தனுஷ் கூட்டணி போட இருக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி போடும் தனுஷ்
சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்க இருக்கிறாராம். பல வருடங்களுக்கு முன்பே தனுஷ் மற்றும் மதுரை அன்பு கூட்டணியில் படம் உருவாவது உறுதியானது. இதற்காக பல இயக்குனர்களை அணுகினர்.
இப்போது ராஜ்குமார் பெரியசாமியின் கதை பிடித்துப் போனதால் தனுஷ் ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் அமரன் படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாகி கொண்டிருக்கிறது. ஆகையால் அந்தப் படம் முடிந்த கையோடு தனுஷ் படத்தை ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் அதற்குள்ளாகவே தனுஷ் தன்னுடைய ராயன் மற்றும் குபேரா படங்களின் படப்பிடிப்பை முடிக்க உள்ளார். எனவே தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, மதுரை அன்பு கூட்டணி உருவாகும் படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.