5 heroines whose chemistry worked out in cinema: சினிமாவில் நாயகனை சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டிருந்தாலும், நாயகி இல்லாத திரைப்படம் விறுவிறுப்பு இல்லாமல் போய் விடுகிறது. அதுவே படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டால் அதே ஜோடி அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகும் நிலை உருவாவது இயற்கையே.
அப்படி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அடுத்தடுத்து வாய்ப்பு பெற்ற 5 ஹீரோயின்களை காணலாம்.
விஜய்- திரிஷா: தளபதியின் கில்லி முதல் லியோ வரை பல படங்களில் ஜோடி சேர்ந்தார் இந்த இளவரசி. ரீல் ஜோடியான இவர்கள், ரியலில் கிசுக்கப்பட்டாலும், எதையும் கண்டு கொள்ளாது வெற்றியை நோக்கி முன்னேறினர்.
ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட்டம் என்றால், நோ சொல்லும் திரிஷா, GOAT படத்தில் தளபதி என்றதும் குத்துப்பாட்டுக்கு ஓகே சொல்லி விட்டாராம்.
ஜூனியர் என்டிஆர்- காஜல் அகர்வால்: தமிழில் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வாலுக்கு, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் தான் மிகவும் பிடிக்குமாம். அவருடன் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்.
அவரைப் பற்றி பேசும்போது நேர்மையானவர் என்றும், அவரது நேர்மையில் ஒரு திமிர் இருக்கும் என்றும், அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஜூனியர் என்டிஆரின் படங்களில் இயக்குனர்களிடம் தானாக முன் சென்று வாய்ப்பும் கேட்டுள்ளார் காஜல்.
சித்தார்த்-ஸ்ருதிஹாசன்: தெலுங்கு திரைப்படங்களில் சித்தார்த் மற்றும் சுருதிஹாசன் இணைந்து நடித்த போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியதால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகினர். ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த ஜோடி பிரிந்தனர் என்பது கூடுதல் தகவல்
எஸ் ஜே சூர்யா- பிரியா பவானி சங்கர்: மான்ஸ்டர் படத்தில் ஒர்க் அவுட்டான ஓவர் கெமிஸ்ட்ரியால் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் ஒரு தலையாக காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப் பட்டது.
இதேஜோடி அடுத்ததாக பொம்மை படத்தில் ஒன்றாக இணைந்தனர். மேலும் எஸ் ஜே சூர்யா இயக்கும் திரில்லர் ஸ்டோரியான கில்லர் படத்திலும் ஜோடி சேர உள்ளார் பிரியா.
தனுசு உடன் மீண்டும் இணையும் பிரியங்கா
தனுஷ்- பிரியங்கா அருள் மோகன்: கடந்த பொங்கலை ஒட்டி தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலில் தன்னிறைவு பெற்றது
இதில் பிரியங்கா மோகன் உடனான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியதால் தனுஷின் அடுத்த படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியங்கா.