Ajith refused to agree to Lyca’s plan: சினிமாவில் எந்த ஒரு நடிகரையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு தனிக் கொள்கையை வடிவமைத்து தன்னையும் முன்னேற்றிக் கொண்டு தன்னைச் சார்ந்தவர்களையும் முன்னேற வைக்கும் வளர்ச்சி அஜித் உடையது.
இவருடைய திரை வாழ்வை திரும்பி பார்த்தால் ஒரே இயக்குனருடன் பலமுறை கூட்டணி அமைத்து வெற்றி படங்களை கொடுத்திருப்பார். இதற்கு காரணம் அவரது தனிப்பட்ட குணமும்,பணிவும், பண்பும் தான்.
அஜித் சம்மதித்தால் அதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்டாகும் சூழல் ஏற்படும்.
இதை மனதில் வைத்து அஜித்தின் விடா முயற்சியே தயாரிக்கும் லைக்கா அஜித்தை வைத்து அடுத்த மூணு வருடங்களுக்கு படம் தயாரிக்க முடிவு எடுத்து உள்ளார்கள்.
கடந்த வருடம் வெளியான துணிவின் வெற்றிக்கு பின் அஜித், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் இணைந்துள்ள படமே விடாமுயற்சி. விடாமல் முயற்சி எடுத்து பல தடைகளை தாண்டி உருவாகி வருகிறது அஜித்தின் விடாமுயற்சி.
கடந்த ஒரு வருடமாக இழுத்து அடிக்க படுகிறது விடாமுயற்சி சூட்டிங். அஜர்பைஜான் நாட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனருக்கு திருப்தி ஏற்படாது போகவே ஒரே காட்சியை நான்கைந்து நாட்கள் படமாக்கி தயாரிப்பாளரையும், அஜித்தையும் வெறுப்பேற்றி வருகிறார் இயக்குனர்.
ஒரு நாள் சூட்டிங்கிற்கு மட்டுமே செலவு 50 லட்சத்தை தாண்டுவதால் விடாமுயற்சிக்கு விடுமுறை கொடுத்தது லைக்கா.
கதை விவாதம் முடிந்து படப்பிடிப்பை ரொம்ப தாமதமாக ஆரம்பித்தது மட்டுமல்லாமல் இன்னும் முடிக்காமல் இழுத்து அடித்து அஜித்தின் கேரியரை காலி பண்ணி வருகின்றனர் லைக்காவும் அவரது குழுவினரும்.
இந்த ஒரு வருடத்திற்கே நொந்து நூடுல்ஸ் ஆனவர் இன்னும் மூணு படமா என்று நோ சொல்லி மறுத்ததோடு லைக்காவுடன் இனி கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஓகே சொல்லி விட்டார்.
அஜித்தின் அடுத்த படம் குட் பேட் அக்லி
தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் உடன் கைகோர்த்த அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி”க்கு ஒப்பந்தமானார்.
குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து படப்பிடிப்பிற்கான பூஜை போட்டு பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு.
2025 ஆண்டு பொங்கலுக்கு விருந்தாக உள்ள இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஜப்பானில் உருவாக உள்ளதாம்.