விஜய்யின் கார் கண்ணாடி சுக்குநூறாக உடைப்பு.. மயிரிழையில் உயிர் தப்பிய தளபதி

Actor Vijay : விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் நடத்தப்பட்டது. மேலும் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை இலங்கையில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சமீபத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருந்தார். இதனால் அரசியலில் ஏதாவது பின் விளைவை சந்திக்க கூடும் என்பதால் கேரளாவில் எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று தனி விமானம் மூலம் விஜய் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அதுவும் காவலன் படத்தின் படப்பிடிப்புக்கு கேரளா வந்த விஜய், அதன் பின்பு 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார். ஆகையால் நேற்று காலை முதலே விஜய்யின் ரசிகர்கள் விமான நிலையத்தை மையம் கொண்டு இருந்தனர்.

வழி நெடுக விஜய்க்கு வரவேற்பு

இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த விஜய் ஹோட்டல் செல்லும் வரையில் வழி நெடுகிலும் ரசிகர் கூட்டம் அலைமோதியது. இதனால் காரின் மேல் கண்ணாடியை திறந்து ரசிகர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக்கொண்டார்.

அப்போது ஆர்ப்பரித்த ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி சுக்குநூறாக உடைக்கப்பட்டு உள்ளது. அதுவும் தளபதியே மயிரிழையில் உயிர் தப்பும் அளவிற்கு கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார். அதன் பிறகு விஜய்யின் கார் எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்ற வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை போலவே கேரளாவில் விஜய்க்கு ரசிகர் கூட்டம் பெரிதாக உள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் கேரளாவிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக கூட கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடத்த திட்டம் இருந்திருக்கலாம்.

விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு