சூர்யாவின் லயன் அப்பில் இருக்கும் 6 படங்கள்.. சூரரைப் போற்று உடன் கூட்டணி போடும் புறநானூறு

Actor Suriya : சூர்யா ரசிகர்களுக்கு செம விருந்தாக வருகின்ற இரண்டு ஆண்டுகள் இருக்க உள்ளது. ஏனென்றால் இப்போது கிட்டத்தட்ட ஆறு படங்கள் சூர்யாவின் லயன் அப்பில் இருக்கிறது.

கங்குவா :

சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வருகிறது கங்குவா. நேற்றைய தினம் இந்த படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

வாடிவாசல் :

அடுத்ததாக கங்குவா படப்பிடிப்பு முடிந்த கையோடு வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்காக லண்டனில் காளைக்கான பொம்மை செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர சூர்யாவும் சொந்தமாக இரண்டு காளைகளை வாங்கி பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் விரைவில் தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

புறநானூறு :

அடுத்ததாக ஏற்கனவே சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணியில் சூரரைப் போற்று படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர்கள் இணைந்து புறநானூறு என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

கைதி 2 :

லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி கூட்டணியில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் தான் கைதி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் எடுக்க உள்ளதாக முன்பே அறிவித்திருந்தார்.

ஆகையால் விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரம் கைதி 2-வில் இடம் பெறுகிறது. அதுவும் கார்த்தி, சூர்யாவும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கர்ணா :

சூர்யாவின் கர்ணா படம் சரித்திர கதை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது. ஆனந்த் நீலகண்டன் திரைக்கதையில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. அதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக கர்ணா படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ரோலக்ஸ் :

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான படம் தான் விக்ரம். எதிர்பார்ப்பை எகிற செய்த இந்த படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் கவனம் பெற்றது. இப்போது முழுமையாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படமாக லோகேஷ் எடுக்க இருக்கிறார்.