Actor Dhanush : தனுஷ் இளையராஜாவின் பயோ பிக்கில் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களில் இணையத்தில் செய்தி உலாவி வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இளையராஜா படத்தின் போஸ்டரும் வெளியாகி இருந்தது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இளையராஜா, கமல், வெற்றிமாறன், பாரதிராஜா மற்றும் பல பிரபலங்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மேடையில் தனுஷ் பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அதாவது நம்மில் பல பேர் இரவு தூக்கம் இல்லாத போது இளையராஜாவின் இதமான பாடலைக் கேட்டு தூங்குவதுண்டு. ஆனால் நான் பல இரவுகள் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே படுத்து இருக்கிறேன்.
அதிலும் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஒன்று இளையராஜா மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தனுஷ் கூறியிருக்கிறார்.
இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஆரம்பம் முதலில் ரஜினி படத்தின் டைட்டிலை தனுஷ் பயன்படுத்தி வந்தார். அதுவும் தனுஷின் மேடைப் பேச்சை பார்த்தால் அப்படியே ரஜினியின் சாயல்தான் இருக்கும்.
குட்டிப் பகை ஆடு உறவா ?
இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் திருமண செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் பிரிந்து விட்டனர். இப்போது குட்டி பகை ஆடு உறவு என்பது போல மகள் ஐஸ்வர்யா வேண்டாம் என்றாலும் அப்பா ரஜினியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை வருங்காலத்தில் ரஜினியின் பயோபிக் எடுத்தால் தனுஷ் அதில் நடிக்க சூப்பர் ஸ்டார் சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறி தான். ஆனால் ரஜினியின் பயோபிக்கில் தனுஷ் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.