Vijay Tv Celebrity: கோடி கோடியாய் கொட்டி கிடந்தாலும் கொடுக்க மனம் இருந்தால் தான் அதற்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு என்று சொல்வார்கள். அதே நேரத்தில் கிடைக்கிற வருமானத்தில் தான் உண்டு, கஷ்டப்படுபவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுபவர்கள் கடவுளுக்கு சமமானவர்களாக பார்க்கப்படுவார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் மிக் ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்தவர்கள் அறந்தாங்கி நிஷா மற்றும் விஜய் டிவி பாலா. இவர்களிடம் பெருசாக சொல்லும் படி சொத்து வசதி இல்லை என்றாலும் மக்களால் தான் தற்போது ஓரளவுக்கு முன்னுக்கு வந்திருக்கிறேன்.
அதனால் அவர்கள் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் பொழுது அதை பார்த்துட்டு எங்களால் சும்மா இருக்க முடியாது என்று சொந்த பணத்தை கையில் எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று உதவி செய்து வந்தார்கள். அதனாலேயே அறந்தாங்கி நிஷா மற்றும் விஜய் டிவி புகழ் என்றைக்கும் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.
மனவேதனையை கொட்டி தீர்த்த அறந்தாங்கி நிஷா
ஆனால் அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் எந்த மாதிரியான ரண வேதனையை அனுபவித்து வருகிறீர்கள் என்று அறந்தாங்கி நிஷா கொடுத்த பேட்டியில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது மக்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று எங்களால் முடிந்தவரை எந்த எக்ஸ்ட்ரீம் வரை சென்றாலும், சிரிக்க வைக்காமல் அந்த மேடையை விட்டு இறங்க மாட்டோம்.
உருண்டு பிரண்டாவது எங்களை நம்பி வந்த மக்களை, அவர்களுக்குள் இருக்கும் கவலையே போக்கும் வகையில் சரியான நகைச்சுவையை வாரி வழங்குவோம். ஆனால் அப்படிப்பட்ட எங்களுக்கும் பல சோகங்கள் கஷ்டங்கள் இருக்கிறது.
இருந்தாலும் எங்களுக்கு இருக்கும் கமிட்மென்ட் மற்றும் இதை வைத்து பல காரியங்களுக்கு உதவ வேண்டும் என்று எல்லாத்தையும் துடைத்து போட்டு வேலைன்னு வந்துவிட்டால் வெள்ளைக்காரர்களாக இறங்கி விடுவோம். ஆனால் அப்படி நாங்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் இன்னும் வரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.
இதில் நான் மட்டுமில்ல விஜய் டிவி பாலாவுக்கும் இதே நிலைமைதான். அவரும் அடிக்கடி எனக்கு போன் பண்ணி அக்கா பேமெண்ட் வந்திருச்சா, எனக்கு வரவில்லை என்று கவலைப்பட்டு கேட்டு வருகிறார். நான் தான் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக வந்துரும் கவலைப்படாத தம்பி என்று சொல்லி வருகிறேன்.
இப்படி எங்களை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டு அதற்கு சரியாக பணம் கொடுக்காமல் இன்னும் வரை ஏமாற்றி வருகிறார்கள். எங்களுக்கு பணம் கொடுத்தால் அதை எங்களுக்கு மட்டுமில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல விஷயங்களை நாங்கள் செய்து வருவோம்.
இதனால் பாதிப்படைவது நாங்கள் மட்டுமல்ல, எங்களை நம்பி இருக்கும் மக்களும் தான். அதனால் தயவு செய்து நாங்கள் வேலை பார்த்ததற்கான கூலியை கொடுத்தாலே போதும் என்று அறந்தாங்கி நிஷா மிக வேதனையுடன் அவருக்கு ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்திருக்கிறார்.