Pasanga movie Sobi Kannu’s vega tamotia viral family photo: “மனுஷங்க எல்லாருடைய சின்ன மனசும், ஒரு சின்ன பாராட்டுக்கு தான் ஏங்கி கிடக்கு என்ற உண்மையை எதார்த்தமாக வெளிப்படுத்தி பார்வையாளர்கள் அனைவரின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் தான் பசங்க.
சசிகுமாரின் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், வேகா தமோடியா மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலரும் இதில் நடித்திருந்தனர்.
பிரம்மாண்டமாக தயாரித்து முன்னணி நடிகர்கள் நடித்து ஏற்படுத்த முடியாத தாக்கத்தை, குறைந்த செலவில் நிறைந்த திரைக்கதையின் மூலம் மக்களின் மனதை வென்று விடுகின்றனர் பாண்டியராஜ் போன்ற படைப்பாளிகள்.
வாழ்வியல் உண்மைகளை நடைமுறை சம்பவங்களுடன் பொருத்தி தன்னம்பிக்கை கொடுத்த பசங்க படத்தில் சோபிக்கண்ணு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் வேகா தமோடியா.
சத்தீஸ்கரை பிறப்பிடமாக கொண்ட வேகா ஆஸ்திரேலியாவில் தனது படிப்பை முடித்துக் கொண்டு மாடலிங்கில் ஈடுபட்டார்.
பசங்க திரைப்படத்திற்கு முன்பு வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், சோபி கண்ணு கதாபாத்திரமே தமிழ் ரசிகர்களிடையே அவரை பிரபலமாக்கியது.
சிம்பு, பரத் நடித்த வானம் திரைப்படத்தில் பரத்தின் ஜோடியாக நடித்திருந்த வேகாவிற்கு தமிழில் வாய்ப்புக்கள் வராது போகவே தெலுங்கு ஹிந்தி என பழமொழிகளிலும் நடிக்கவும் தயாரிக்கவும் செய்தார்.
கணவருடன் இருக்கும் குடும்பப் படத்தை பதிவிட்ட வேகா
2016 ஜெய் கங்கா தாஸ் என்ற படத்துடன் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கிறார் வேகா.



எப்போதும் மார்டன் உடையில் நச்சென போஸ் கொடுக்கும் வேகா, தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
பசங்க படம் வெளிவந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் இளமை மாறாது சிக்கென இருக்கும் சோபி கண்ணுவின் கணவரா இவர்? என்பதை நம்ப மறுக்கின்றனர் இவரது ரசிகர்கள்.