Dhanush’s has unwanted job on Ilayaraja’s biopic: தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இசை ஆளுமை இசைஞானி இளையராஜா ஆவார்.
இளையராஜாவுக்கு முன், பின் என தமிழ் சினிமாவை பிரிக்கும் அளவு கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக இசைத்துறையில் கோலோச்சி வருகிறார்.
இசைஞானிக்கு செய்யும் நன்றி கடனாக அவரது திரை வாழ்க்கையை படமாக மாற்றும் முயற்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
“இளையராஜா” என்ற பெயரில் உருவாகி வரும் இதில் தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். கூடுதல் சிறப்பம்சமாக கமலஹாசன் திரைக்கதை எழுத உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இளையராஜா பயோபிக் என்றதுமே அவரது ரசிகர்களை தாண்டி, சமூக நல ஆர்வலர்கள், விமர்சகர்கள் என பலரையும் உற்று நோக்க வைத்துள்ளது.
இளையராஜாவின் மேற்பார்வையில் உருவாக உள்ளதால் இதில் எந்த விதமான சர்ச்சைகளும், எதிர்மறையான நிகழ்வுகளும், ராஜாவின் மறுபக்கமும் தெரிய வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர் விமர்சகர்கள்.
இயக்குனரை மாற்றிய இளையராஜா
தனுஷ் அவருக்கு நெருக்கமான சில இயக்குனர்களை இளையராஜாவிடம் அனுப்பி வைத்தார். மாரி செல்வராஜ், பால்கி போன்ற இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இளையராஜாவின் விருப்பத்தின் பெயரில் அருண் மாதேஸ்வரன் இதன் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதிலிருந்து தனுஷ் சொல்ல வருவது என்னவென்றால் தனுஷ் நடிக்க மட்டும் போவது கிடையாது. அருண் மாதேஸ்வரனை இயக்குனராக பிம்பம் செய்து அவர் பின்னால் இருந்து, இந்த படத்தையும், கூடவே இயக்குனரையும் இயக்க உள்ளார் தனுஷ்.
ஆக மொத்தம் அருண் மாதேஸ்வரனை டம்மியாக்கிவிட்டு மெயின் பிக்சர்ஸ் முழுவதும் தனுஷ் கையில! இதுல இளையராஜாவின் சம்மதம் வாங்கிய பின்பே அனைத்து காட்சிகளும் படமாக்க போகிறதாம். உண்மை வெளிவர வாய்ப்பில்லை.
சமீபத்தில் வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக்கையே நார், நாராக கிழித்து தொங்க விட்டனர். முழு நீள படத்தை என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ..?
சரித்திரம் படைக்கனும்னு நெனச்சு தனுஷ் செய்யும் இந்த தந்திர வேலைகளால் அவர் கண்டிப்பாக நொந்து நூடுல்ஸ் ஆவது உறுதி.