சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஆம்பள கழுத்துல தாலி, முட்டாள்தனமாக இருக்கும் ஹாட் ஸ்பாட் வீடியோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Hot Spot : விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ஹாட் ஸ்பாட் படம். இதில் கலையரசன், சாண்டி, ஆதித்யா, அம்மு அபிராமி மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதாவது தமிழ் கலாச்சாரத்திற்கு முரண்பாடான பல விஷயங்களை இயக்குனர் இதில் உட்புகுத்தி இருந்தார்.

குழந்தைகள் பேசக்கூடாத வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது. மேலும் அண்ணனுக்கும் தங்கை இடையே தவறான உறவு, ஆணுக்கு பெண் தாலி கட்டுவது என பல முரணான சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது.

தமிழ் கலாச்சாரத்திற்கு முரண்பாடான பல விஷயங்கள்

அந்த வகையில் இப்போது ஹாட்ஸ்பாட் படத்தின் ஸ்நேக் பிக் வெளியாகி இருக்கிறது. இதில் கௌரி கிஷனின் தந்தை கழுத்தில் தாலியுடன் அமர்ந்து இருக்கிறார். தனது மகளிடம், உன்னுடைய கணவன் குளிக்கும் போது தாலியை கழட்டி வச்சி இருக்கான்.

இது எவ்வளவு பெரிய தப்பு. இப்படி தான் அவுங்க அப்பா, அம்மா வளத்தார்களா என்று ஏளனமாக பேசுகிறார். இதனால் கடுப்பான கௌரி கிஷனின் கணவன் அவருடைய தந்தையுடன் சண்டை போடுகிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனையே கை நீட்டி அடிக்கிறார் மனைவி.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் டேய் என்னடா இதெல்லாம், எல்லை மீறி போறீங்கடா என்று கமெண்ட் செய்துள்ளனர். புதுவித புரட்சியாக படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக இயக்குனர் ஹாட்ஸ்பாட் படத்தை எடுத்துள்ளதாக கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Trending News