Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று அராஜகம் பண்ணிட்டு வந்த குணசேகரனை விட தற்போது டபுள் மடங்காக உமையாள் இருக்கிறார். அந்த வகையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் வருகிற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் என்று சொல்லி இருந்தார்கள்.
ஆனால் குணசேகரனை தனியாக கூப்பிட்டு நிச்சயதார்த்தத்துக்கு பதிலாக தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணத்தையே நேரடியாக பண்ணிவிடலாம் என்று பிளான் போட்டுக் கொடுத்து விட்டார். குணசேகரனும் நல்ல ஐடியா தான். ஆனால் அது சாத்தியமாகுமா என்று கேட்கிறார்.
உடனே உமையாள் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நான் பக்கவாக பண்ணி விடுகிறேன். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் இந்த கல்யாணத்தில் தடங்கள் வந்து விடக்கூடாது. அதற்காகத்தான் நான் இவ்வளவு மெனக்கெடு செய்கிறேன். மேலும் இந்த விஷயங்கள் உங்களையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்கிறார்.
குணசேகரனும் நீ சொன்னால் எதுனாலும் சரிதான் என்பதற்கு ஏற்ப சம்மதத்தை கொடுத்து விட்டார். அத்துடன் இந்த விஷயங்கள் முடியும் வரை நீயும் சித்தார்த்தும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஈஸ்வரிக்கும் உமையாளுக்கும் சண்டை வருகிறது. அதிலும் ஜனனி நீங்கள் நினைக்கிறது எதுவுமே நடக்காது.
நடக்க போகும் கல்யாணம்
என்னுடைய தங்கச்சி அஞ்சனாவுக்கும் சித்தார்த்துக்கும் நான் கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன் என்று சவால் விடுகிறார். இதை எல்லாம் கேட்டு பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி சித்தார்த் அமைதியாகவே இருக்கிறார். அதனால் ஜனனி மற்றும் சக்தி, சித்தார்த்தும் அஞ்சனாவும் காதலித்ததற்கான எவிடன்ஸை தேடிக்கொண்டு போகிறார்.
போகும்போது கதிர், சக்தியிடம் நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வச்சுக்கோ அதன்படி எல்லாத்தையும் பக்காவாக நடத்தி விடு என்று கூறுகிறார். இதில் தாரா பாப்பமும் ஏதோ ஒரு பிளான் இருக்கு என்று புரிந்து கொண்டு அப்பாவுக்கு மொத்த சப்போர்ட்டை கொடுக்கிறார்.
அந்த வகையில் கதிர் சொன்ன பிளான் படி குணசேகரனுக்கு ஒரு சம்பவத்தை சக்தி செய்வதற்கு தயாராகி விட்டார். இதனை தொடர்ந்து ஜனனி அவருடைய பழைய வீட்டில் போய் எல்லாத்தையும் தேடி எடுத்து விடுகிறார். இதில் இன்னொரு டுவிஸ்டான விஷயம் என்னவென்றால் குணசேகரன் உமையாள் ஏற்பாடு பண்ணின கல்யாணத்தில் ஜாம் ஜாம் என்று நடக்கப்போகிறது.
ஆனால் அது தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கிடையாது. அஞ்சனாக்கும் சித்தார்த்தத்திற்கும் கல்யாணம் நடக்கும். இந்த கல்யாணத்தின் மூலம் இதுவரை சேர்த்து வைத்த கௌரவத்தை மொத்தமாக இழந்து அவமானத்தில் கூனி குறுகி போய் நிற்கப் போகிறார் குணசேகரனும் இவருடைய தங்கச்சி உமையாளும்.