சாக்லேட் பாயுடன் நடிக்க முடியாமல் போன சூர்யாவின் தங்கச்சி..! மணிரத்தினத்துக்கே நோ சொன்ன சிவகுமார்!

Sivakumar said no to Mani Ratnam who called Surya’s sister to act:  தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படுபவர் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை சிவக்குமார். சட்டென ஏற்படும் கோபத்தால் பல சர்ச்சைகளில் சிக்கி விடுகிறார் இந்த மாமனிதர்.

தமிழ் இலக்கியங்களை கரைத்துக் குடித்து மாணவர்களுக்கு புத்தி புகட்டும் இந்த புத்திமானுக்கு சூர்யா மற்றும் கார்த்திக்கை தவிர பிருந்தா என்கின்ற ஒரு அழகிய மகளும் உண்டு.

சூர்யா மற்றும் கார்த்தியின் சகோதரியாகிய இந்த பிருந்தா  பின்னணி பாடகி ஆவார். மணிரத்தினம் தனது படம் ஒன்றிற்கு புதுமுக நடிகையை தேடிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இவர் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கோங்குரா, சூர்யாவின் தங்கை பிருந்தாவை பற்றி மணிரத்தினத்திடம் கூறியுள்ளார்.

மணிரத்தினமும் சிவக்குமார் சார் கிட்ட, அவரது மகளை படத்தில் நடிக்க வைக்க பேசி பார்த்திருக்கிறார். கேட்ட மாத்திரத்திலே முடியாது என்று மறுத்து விட்டாராம் சிவக்குமார்.

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து, ஒருவித கொள்கை கோட்பாட்டுடன் இருந்து வரும் என் மகளுக்கு நடிப்பதில் ஆர்வமில்லை.

அதுமட்டுமின்றி சினிமால நடிச்சா என்ன நடக்கும்னு தெரியும். அதனால என் பொண்ணு நடிக்க மாட்டான்னு விடாப்பிடியாக கூறினார் சிவக்குமார்.

படத்தில் நடிக்கும் போது ஒருவித அசம்பாவிதங்களும், தவிர்க்க முடியாத காரணத்தினால் நடிகையின் அனுமதியில்லாமலேயே நெருக்கத்துடன் கலந்த முத்த காட்சிகளும் அரங்கேறுவது இயல்புதான். இதை மனதில் வைத்தே கூறினார் சிவக்குமார்.

சிவகுமாரின் மகள் பிருந்தாவை நடிக்க வைக்க கேட்ட படம்

மணிரத்தினம், சிவக்குமார் மகளை நடிக்க வைக்க கேட்ட படம் மாதவன் நடித்த “கன்னத்தில் முத்தமிட்டால்” சூப்பர் ஹிட் மூவி. அதில் சிம்ரன் ரோலுக்கு தான் பிருந்தாவை நடிக்க வைக்க கேட்கப்பட்டதாம்.

பிருந்தாவும் நடிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். இவர் ராட்சசி, ஜாக்பாட் போன்ற படங்களில் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.

அது மட்டும் இன்றி  பாலிவுட்டில் வெளியான பிரம்மாஸ்திரம் படத்தின் தமிழ் பதிப்பில் ஆலியாபட்க்கு பிருந்தாதான் பின்னணி குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment