Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் பிசினஸை ஆரம்பித்து கை நிறைய லாபத்தை சம்பாதித்து விட்டோம் என்ற மெதப்பில் சுற்றுகிறார் கோபி.
அத்துடன் பாக்யா ஆரம்பித்த ஹோட்டலில் லாபம் இல்லாமல் நஷ்டத்தை அடைந்திருக்கிறார் என்று தெரிந்ததும் ஏளனமாக கோபி பேசுகிறார்.
அதாவது உனக்கு சமையல் மட்டும்தான் தெரியும். எனக்கு எப்படி பிசினஸ் பண்ணி லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற யுத்தி தெரியும் என்று படித்த திமிரை காட்டி பேசினார்.
அடுத்த நாள் கோபி ஆரம்பித்த ஹோட்டலில் உள்ள செப் லீவு போட்டதும் எதுவுமே சமைக்காமல் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.
இதை தெரிந்து கொண்டு பதறிப் போன கோபி, அம்மாவுக்கு போன் பண்ணி புலம்புகிறார்.
கோபிக்கு உதவிய பாக்கியா
உடனே அம்மா நீ எதுவும் கவலைப்படாத நான் எல்லா ஏற்படும் பண்ணுகிறேன் என்று சொல்லி ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். பின்னாடியே வேறொரு ஹோட்டலில் இருந்து சாப்பாடு இறங்குகிறது.
அத்துடன் சேர்ந்து பாக்யாவும், கோபி ஹோட்டலுக்கு வந்து வியாபார யுக்தி தெரிந்தால் மட்டும் போதாது சமைக்கவும் தெரிய வேண்டும்.
அப்போதுதான் அந்த லாபத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கோபிக்கு பதிலடி கொடுத்து விட்டார்.
கோபிக்கும் வேற வழி இல்லை பாக்யா கொண்டு வந்த சாப்பாடு வாங்கி தான் அவருடைய ஹோட்டலுக்கு வந்த கஸ்டமர்க்கு கொடுத்து திருப்திப்படுத்தினார்.
ஆனாலும் என்ன அவமானப்பட்டாலும் இந்த கோபியும் ஈஸ்வரியும் திருந்துவது மாதிரியே தெரியவில்லை.
இதனை தொடர்ந்து அமிர்தாவுக்கும் எழிலுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் தான் கணேசால் இனி எந்த தொந்தரவும் வராது என்று ஈஸ்வரி, அமிர்தாவிடம் சொல்கிறார்.
உடனே அமிர்தா இதைப் பற்றி எழிலிடம் சொல்லி நம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று கேட்கிறார்.
அதற்கு எழில் நமக்கு நிலா பாப்பா மட்டுமே போதும் என்று அமிர்தாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில் செழியன் ஆபீஸ் விஷயமாக போன் பேசும்போது ஜெனிக்கு கொஞ்சம் சந்தேகம் வருகிறது.
எங்கே மறுபடியும் மாலினிடம் பேசி சிக்கிக் கொள்வாரோ என்ற பயத்தினால் ஜெனி, செழியன் இடம் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
அதற்கு செழியன் நீ எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். நான் மாலினிடம் பேசமாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.