ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

25 வருஷ கனவை நினைவாக்க போகும் விஷால்.. அர்ஜுனுக்கு நன்றி சொல்லி மிஸ்கின்-க்கு போட்டா நாமம்

Vishal: நடிகர் விஷால் வெற்றி படங்களை கொடுத்து பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, பல சர்ச்சைகளில் சிக்கி அனைவரது கவனத்தையும் பெற்று பிரபலமாகி விடுகிறார்.

அப்படிப்பட்டவர் தற்போது 25 வருஷ கனவை நினைவாக்க வேண்டும் என்று புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

அதாவது சினிமாவிற்குள் வரும் பொழுது ஒரு சிறந்த இயக்குனராக பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக விஷால் பணிபுரிந்து இருக்கிறார்.

ஆனால் சூழ்நிலை காரணமாக இவருடைய டிராக் மாறி நடிகராக பயணிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

சபதம் போட்ட விஷால்

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் மிஸ்கின் விஷால் கூட்டணி உருவாகியது. ஆனால் அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் படம் பாதிலேயே டிராப் ஆகிவிட்டது.

தற்போது இப்படத்தை நானே இயக்கி தயாரித்து நடித்து வெற்றியாக்குகிறேன் என்று சபதம் போட்டு விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்.

இது சம்பந்தமாக சமீபத்தில் விஷால் அளித்த பேட்டியில் என்னுடைய 25 வருஷ கனவை நிறைவேற்றப் போகிறேன்.அதாவது இயக்குனராக வேண்டும் என்று தான் என்னுடைய ஆசை.

அதை தற்போது துப்பறிவாளன் இரண்டாம் படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன். இதற்கான படப்பிடிப்பு விஷயமாக லண்டனுக்கு சென்று அனைத்து வேலைகளையும் துவங்கப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன் அர்ஜுனுக்கு நன்றி கூறி மிஸ்கினுக்கு நாமம் போடும் வகையில் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் புது அவதாரமாக இயக்குனர் என்ற பயணத்தை தொடங்கப் போகிறார்.

இதற்கிடையில் விஷாலின் லெஃப்ட் அண்ட் ரைட் ஆக இருந்த ரமணா மற்றும் நந்தாவை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

ஏனென்றால் விஷால் நடிப்பில் வெளிவந்த லத்தி படத்தின் மூலம் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக. இப்பொழுது இயக்குனராக பயணிக்கும் பொழுது கூட அவர்களுடைய காத்து கூட என் பக்கம் வரக்கூடாது என்று மொத்தமாக வெறுத்து விட்டார்.

அதே மாதிரி தான் மிஸ்கினுக்கும் பெரிய கூடு கும்பிடு போட்டு ஒதுக்கி விட்டார்.

ஆக மொத்தத்தில் கூட இருந்தவர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் விஷால் எடுத்த தன்னிச்சையான முடிவு அவருக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.

தற்போது நடிகராக வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இயக்குனராக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடி எடுத்து வைக்கிறார்.

Trending News