கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா? வாரிசு நடிகை பண்ணும் அக்கப்போரு

பொதுவாக நடிகரின் திருமணத்தை தள்ளிப் போடுவது வழக்கம் தான். அவ்வாறு வாரிசு நடிகை ஒருவர் தன்னுடன் நடித்த ஹீரோ ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இவர்கள் தான் திருமணம் செய்து கொல்லப் போகிறார்கள் என்ற தகவலும் வந்தது.

நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் என ஹீரோ நடிகையை கழட்டி விட்டு விட்டார். ஆனால் நடிகையோ செம தில்லானவர். அவருடைய படங்களை எடுத்துப் பார்த்தாலே மிரள வைக்கும் கேரக்டரில் தான் நடித்திருப்பார். முதல் காதல் தோல்வியானதும் அதை உதறித் தள்ளிவிட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வாரிசு நடிகை என்பதை உடைக்க பல நல்ல கேரக்டர்கள் தேர்ந்தெடுத்து வந்தார். இந்நிலையில் திடீரென நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. சினிமா பிரபலம் இல்லாத ஒருவரை சில வருடங்களாக நடிகை காதலித்து வந்துள்ளார்.

மேலும் அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இவர்கள் விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இப்போது ஜோடியாக வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கிருந்து நடிகை வெளியிடும் ரொமாண்டிக் புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கல்யாணத்திற்கு முன்பே ஹனிமூனா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். வாரிசு நடிகை பண்ணும் அக்கப்போரு இணையத்தையே அல்லோப்படுத்தி வருகிறது.