Actor Robo Shankar: ரோபோ சங்கர் தன் மகளின் கல்யாணத்தை ஊர் மெச்சும் படி நடத்தி இருக்கிறார். அது பற்றிய பேச்சு தான் இப்போது சோசியல் மீடியாவில் கலை கட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திக், இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. சின்னத்திரை, பெரிய திரை உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து கறி விருந்து, திருமண ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்வுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது அனைத்தும் சோசியல் மீடியா சேனல்களிலும் உடனுக்குடன் வெளியானது.
வைரக்கல் பதித்த ரோலக்ஸ் வாட்ச்
அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு வந்திருந்த பரிசுப் பொருட்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அதில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் பரிசாக வந்திருந்தது.
ஆனால் பலரையும் வியக்க வைக்கும் ஒரு பரிசு என்றால் அது வைரக்கல் பதித்த ரோலக்ஸ் வாட்ச் தான். மாப்பிள்ளைக்கு ஆண்கள் அணியும் வாட்ச், கல்யாண பொண்ணுக்கு பெண்களுக்கான வாட்ச் என வந்திருந்தது.
இதன் விலை கிட்டத்தட்ட 25 லட்சம் இருக்குமாம். இதை பார்த்த இந்திரஜாவுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதேபோல் கமலும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார்.
அவர் பிரத்யேகமான பூக்கள் நிறைந்த பொக்கேவை கொடுத்திருந்தார். இதையெல்லாம் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு இந்திரஜா காட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆக மொத்தம் கல்யாணத்துக்கு செய்த செலவில் பாதிக்கு மேல் கிப்ட் மற்றும் மொய் பணமாகவே இவர்களுக்கு வந்து விட்டது. இதனால் பிகில் பாண்டியம்மா இப்போ ஹேப்பி அண்ணாச்சி.