வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

தலைகீழா நின்னாலும் முடியாதுன்னு சொன்ன ஏகே.. அஜித்தின் கட்டளையால் பதறி அடித்த விடாமுயற்சி டீம்

Ajith gave good news to fans for vidaamuyarchi movie: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் டிராப் ஆகிவிட்டது. இனிமேல் அவ்வளவுதான் என்று பல வதந்திகள் வந்த வண்ணம்  இருந்தன.  

அனைத்து விமர்சனங்களையும் தன்னுடைய ஒரே வீடியோவால் சுக்குநூறாக்கினார் அஜித்.

விடாமுயற்சி என்பது இவர் நடித்து வந்த படம் என்றாலும் கூட விடாமுயற்சிக்கு முழு முதல் அர்த்தமாக திகழ்ந்து வருகிறார் நம்ம தல அஜித்.

துணிவின் வெற்றிக்கு பின் இழுபறியாக இருந்த இயக்குனர் தேடலில் லைகா மற்றும் அஜித் இருவருமே மகிழ்திருமேனியின் இயக்கத்தில் நம்பிக்கை கொண்டு துவங்கப்பட்ட திரைப்படமே விடா முயற்சி.

சூட்டிங் முழுவதுமாக அஜர்பைஜான் நாட்டில் பல கட்டங்களாக நடந்து வந்தது. பல போராட்டங்களுக்கு பின்,இறுதி கட்டத்தை எட்டி இருந்த நிலையில் பல்வேறு காரண காரியங்களால் விடாமுயற்சிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்றே கூறலாம்.

இந்த நிலையில்தான் விடாமுயற்சி கைவிடப்பட்டது என்று ரசிகர்களிடையே தாறுமாறாக கொளுத்திப் போட்டனர் அஜித்தின் நலவிரும்பிகள்.

இதனைக் கண்டு கொதித்து எழுந்த தல,விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோவை வைரல் ஆக்கினார்.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு காரில் அமர்ந்தபடி ரிஸ்க்கான  ஸ்டண்ட் காட்சியில் டூப் ஏதுமின்றி நடிக்கப் போய் அஜித் மற்றும் ஆரவ் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள்.

இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கும் படம் கண்டிப்பாக டிராப் ஆகாது விரைவில் திரைக்கு வரும் என்று சொல்லாமல் சொல்லினார் அஜித். 

விடாமுயற்சிக்கு 30 நாட்கள் கெடு வைத்த அஜித்

இதனைத் தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் தொடர்ந்து 30 நாட்கள் ஷூட்டிங் எனவும்,

25 நாட்களுக்குள் முடித்துவிட்டு 5 நாட்கள் எஞ்சிய வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிரடியான கட்டளை ஒன்றை போட்டுள்ளார் அஜித்.

அது மட்டுமின்றி மே 1 அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியிடுவது பற்றியும் படக்குழுவினருக்கு தெரிவித்து உள்ளாராம்.

இதனால் அஜித்  ரசிகர்கள் ஹேப்பி ஆகி உள்ளனர். இதில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லியில் இணைய உள்ளார் என்பதையும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜூன் 13 முதல் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்க உள்ளது என்று தெரிவித்துள்ளது படக்குழு. சென்னையில் ஆரம்பிக்கப்படும் இதன் படப்பிடிப்பு அதற்குப் பின் முழுவதுமாக ஜப்பானில் நடக்க உள்ளதாம்.

- Advertisement -spot_img

Trending News