ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குருட்டு தைரியத்தில் சுடுகாட்டில் சிக்கும் இளவட்டங்கள்.. மிரட்டும் பார்த்திபனின் டீன்ஸ் டிரைலர்

Teenz Trailer: பார்த்திபன் இயக்கும் படங்கள் எல்லாமே புதுமையாகத் தான் இருக்கும். இப்படி வித்தியாசமாக ஒவ்வொரு படைப்புகளையும் தரும் அவர் இப்போது டீன்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.

யோகி பாபு உடன் இணைந்து பல இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் இதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இளசுகள் என்றாலே பயமறியாது என்று சொல்வார்கள்.

அதற்கேற்றார் போல் குருட்டு தைரியத்தில் மாணவர்கள் செய்யும் ஒரு வேலை அவர்களுக்கே பயத்தை காட்டிவிடுகிறது. இப்படி அமானுஷ்யம் திகில் கலந்து டிரைலர் வெளியாகி உள்ளது.

அமானுஷ்யத்தில் மிரட்டும் பார்த்திபன்

ஆரம்பத்தில் கலகலப்பாக இருக்கும் மாணவர் கூட்டம் ஆபத்தில் சிக்கும்போது விழி பிதுங்கி போகின்றனர். அந்த காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக இருக்கிறது.

அதற்கேற்றார் போல் டி இமானின் பின்னணி இசை பயங்கர திகிலாக இருக்கிறது. செய்வினை, பில்லி சூனியம் என டிரைலர் முழுக்க படு பயங்கரமாக உள்ளது.

இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் கோடை விடுமுறையை முன்னிட்டு அரண்மனை 4 உள்ளிட்ட திகில் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அதில் இப்போது பார்த்திபனின் டீன்ஸ் படமும் இணைந்துள்ளது. இது எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Trending News