வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காதலிக்காக கொலைவெறியோடு அலையும் விஷால்.. கெட்ட வார்த்தை, ரத்தம் தெறிக்க வெளியான ரத்னம் ட்ரெய்லர்

Rathnam Trailer: மார்க் ஆண்டனியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிப்பில் ரத்னம் வெளிவர இருக்கிறது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.

செம ஆக்சன் ட்ரீட்டாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 26 அன்று வெளியாகிறது. அதைத்தொடர்ந்து இன்று ட்ரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அனல் பறக்கும் ரத்னம் ட்ரெய்லர்

அதற்காகவே காத்திருந்த விஷால் ரசிகர்கள் தற்போது ட்ரெய்லரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். வழக்கம் போல கத்தி, ரத்தம், வெட்டு குத்து என ட்ரெய்லர் அதிரடியாக இருக்கிறது.

அதிலும் முகம் சுளிக்க வைக்கும் 2 கெட்ட வார்த்தைகள் இருப்பது நிச்சயம் சர்ச்சையாகும். ஏற்கனவே லியோ படத்தில் இப்படித்தான் பெரும் பூகம்பம் வெடித்தது.

அதே போன்று விஜய் வழியில் விஷாலும் இறங்கி இருக்கிறார். ஆக மொத்தம் அனல் பறக்க வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending News