செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

எனக்கு எண்டே கிடையாது படங்களை வாரி குவிக்கும் ரஜினி.. தலைவர் 174 இயக்குனருக்கு போட்ட பிள்ளையார் சுழி!

Movies in Super star Rajini’s Lineup: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்கள், ஜெயிலரின் மாபெரும் வெற்றிக்கு பின் பன்மடங்கு பலத்தோடு ஏறுமுகமாகவே தனது கேரியரை நகர்த்திக் கொண்டு செல்கிறார்.

தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து, வழக்கமான முறையில் அல்லாது, தரமான படங்களை தரம் பிரித்து கொடுக்க இருக்கிறார்.

ஆம் ஒவ்வொரு படத்திற்கும் தனித்துவமான கதையுடன் மாஸ் காட்ட வருகிறார். ரஜினியின் லைனில் இருக்கும் படங்கள் இதோ,

வேட்டையன்: ஜெய் பீம் புகழ் த செ ஞானவேல் இயக்கத்தில்  போலி என்கவுண்டருக்கு எதிரான சமூக சீர்திருத்த அக்கறையுடன் தலைவர் இணைந்துள்ள திரைப்படமே வேட்டையன்.  

சென்னை சுற்றிய பல இடங்களிலும் தென் மாவட்டங்களிலும் நடந்து வரும் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நோக்கில் பரபரப்பாக ரெடியாகி வருகிறது தலைவரின் வேட்டையன்.

தலைவர் 171: வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தரமான கேங்ஸ்டர் ஸ்டோரியில் இணைய உள்ளார் தலைவர். படத்திற்கான தலைப்பு மற்றும் டைட்டில் பிரமோ வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லோகேஷ் மற்றும் தலைவரின் கூட்டணி வேற  லெவல்ல சம்பவம் செய்ய உள்ளது என்பது மட்டும் உண்மை.

தலைவர் 172: அண்ணாத்த, தர்பார்  போன்ற படங்களால் பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து  தலைவரின் கேரியரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இருந்த போது அவருக்கு  கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் ஜெயிலர். 

 உலக அளவில்  வசூலில் கிட்டத்தட்ட 600 கோடியை தாண்டி மீண்டும் தன்னை வசூல் மன்னன் என்று நிரூபித்தார் சூப்பர் ஸ்டார். இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் ஜெயிலர் 2  தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

ஐசரி கணேஷ் உடன்  கூட்டணி போடும் தலைவர்

தலைவர் 173: துருவ நட்சத்திரத்தின் மூலம் மாபெரும் சிக்கலை சந்தித்து வரும் கௌதம் மேனனை அழைத்து ஐசரி கணேஷ் அவர்கள் நாம் விரைவில் ரஜினியுடன் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறியுள்ளாராம்.

இதனை பகிர்ந்து  உள்ளதன் மூலம் கௌதம் மேனன், சூப்பர் ஸ்டார், ஐசரி கணேஷ் போன்றோரின் முக்கூட்டணி ஓரளவு உறுதியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

ரஜினியின் லைனில் கடைசியாக கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜின் பெயரும் அடிபட்டு வருகிறது. அவர் சூப்பர் ஸ்டாரை வைத்து தலைவர் 174-யை இயக்கும் கனவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Trending News