வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஷாலை பார்த்து பயந்து ஓடிய அரண்மனை 4.. தமன்னா, ராஷி கண்ணாவின் தரிசனம் எப்ப தெரியுமா.?

Actor Vishal: ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான பிரமோஷனில் தற்போது படகுழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனென்றால் அதே தேதியில் சுந்தர் சி-யின் அரண்மனை 4 படமும் வெளியாகிறது. அதனாலயே விஷால் கவனம் ஈர்க்கும் வகையில் பல சர்ச்சையான விஷயங்களையும் பேட்டிகளில் பேசி வருகிறார்.

ஆனால் தற்போது அவருக்கு நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவருடன் மல்லு கட்ட முடியாது என்று நினைத்தாரோ என்னவோ சுந்தர் சி தற்போது பின்வாங்கியுள்ளார்.

விஷாலை பார்த்து பின் வாங்கிய அரண்மனை 4

அதன்படி அரண்மனை 4 மே 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதனால் ரத்னம் சோலோவாக வந்து மொத்த கலெக்ஷனையும் தட்டி தூக்குவதற்கு தயாராகி விட்டார். ஏற்கனவே ட்ரைலரில் சில கெட்ட வார்த்தைகள் வந்து பரபரப்பை கிளப்பியது.

அதைத்தொடர்ந்து படத்தில் இருக்கும் ஒரு அரசியல் வசனமும் வைரலாகி வருகிறது. இப்படி கவனம் ஈர்த்து வரும் விஷால் தற்போது சுந்தர் சி ஒதுங்கியதால் செம குஷியில் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும் தமன்னா, ராஷி கண்ணாவின் தரிசனத்தை காண இருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டுமா என குமுறி வருகின்றனர்.

Trending News