புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பொய் பித்தலாட்டம் பண்ணிய ரோகினிக்கு விஜயா கொடுத்த தண்டனை.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், இதுவரை பொய் பித்தலாட்டம் பண்ணி வீட்டில் சொகுசாக வாழ்ந்து வந்த ரோகினிக்கு தற்போது தான் தண்டனை கிடைத்து வருகிறது. அதுவும் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு என்று கால தரையில் கூட படாம பொக்கிஷமாக பார்த்துக் கொண்டார் விஜயா.

ஆனால் அதற்கெல்லாம் முக்கிய காரணம் ரோகிணியின் அப்பா மலேசியாவில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து கொண்டிருக்கிறார் என்பதனால் தான். ஆனால் தற்போது இதற்கே ஆப்பு என்று தெரிந்ததும் அதை சரி செய்யும் விதமாக கோவிலில், ரோகினியை வைத்து நேர்த்திக்கடனை செய்ய முடிவு எடுத்து விட்டார்.

அதற்காக ரோகிணியை அங்கபிரவேசம் பண்ணி, கையில் சூடனை ஏற்ற சொல்லி, காலையில் எழுந்து வீட்டில் முன் கோலம் போட சொல்லி தொடர்ந்து இந்த மாதிரி விஷயங்களை பண்ண சொல்லி விஜயா வற்புறுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் ரோகினிக்கு தேவையான வேலையை இனி 45 நாட்களுக்கு அவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரோகினையே வச்சு செய்யும் விஜயா

அத்துடன் சாப்பாட்டில் உப்பு உரப்பு இல்லாமல் பத்திய உணவு தான் சாப்பிட வேண்டும் என்று ஐயர் கூறியிருக்கிறார். அதன்படி விஜயா, ரோகினியை படுத்தி எடுக்கிறார். இதையெல்லாம் வேண்டா வெறுப்பாக ரோகினி செய்து வந்த நிலையில் மனோஜ், ரோகினியின் கை காலை பிடித்து விடுகிறார். இதை பார்த்த விஜயா மனோஜை திட்டி ரூமை விட்டு வெளியே அனுப்புகிறார்.

அடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது ரோகிணியும் வந்து சாப்பிடுவதற்கு இருக்கிறார். அந்த நேரத்தில் முத்து, ரோகினி இந்த சாப்பாடு சாப்பிடக்கூடாது. அவருக்கு என்று தனி சாப்பாடு செய்து சாப்பிட வேண்டும் என்று ஐயர் கூறி இருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்தி விடுகிறார்.

ஏற்கனவே டார்ச்சர் தாங்க முடியாமல் தவித்து வரும் ரோகிணிக்கு முத்து சொன்னது ரொம்பவே கடுப்பாக்கி விட்டது. பின்பு விஜயாவும், ஆமாம் நானும் மறந்துவிட்டேன் என்று ரோகிணிக்கு பத்திய சாப்பாடு பண்ண சொல்லிக் கொடுத்து சாப்பிட வைக்கிறார். தொடர்ந்து இதே மாதிரி 45 நாட்கள் விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.

இதுவரை ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றிக் கொண்டிருந்த ரோகினி எந்த பிரச்சனையும் இல்லாமல் சொகுசாக இருந்தார். ஆனால் தற்போது ரோகிணியை ஆட்டிப்படைக்கும் விதமாக விஜயா செய்து வரும் ஒவ்வொரு விஷயமும் பார்க்கவே குளுகுளுவென்று கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

Trending News