சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தினேஷ் எஸ்கேப், முழு ஐட்டம் நடிகையாக மாறிய ரட்சிதா.. சில்க் ரேஞ்சுக்கு மாறிய வைரல் வீடியோ

Actress Rachitha: சின்னத்திரை ஜோடிகளான தினேஷ், ரட்சிதா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் இருக்கிறது ரட்சிதாவின் சமீபகால நடவடிக்கைகள். இப்போதெல்லாம் அவர் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

அதிலும் பல கெட்டப்புகளில் போட்டோ சூட் செய்து அவர் சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறார். அதில் கிளாமர் போட்டோக்கள் தான் அதிகம் இடம்பெறுகின்றது.

மேலும் பெரியதிரை பக்கம் கவனம் செலுத்தி வரும் இவர் ஃபயர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பட குழு ஒரு வீடியோவை வெளியிட்டு அவரை வாழ்த்தி இருக்கிறது.

ஜே.எஸ்.கே இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் ரட்சிதா மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரட்சிதாவின் கவர்ச்சி அவதாரம்

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அவர் சில்க் ஸ்மிதா போல் பயங்கர கிளாமரில் நடித்திருக்கிறார். அதிலும் கட்டி இருக்கும் புடவையை கழட்டி வீசிவிட்டு ஒரே ஒரு வெள்ளை நிற சட்டையை அணிந்து கொண்டு நிற்கிறார்.

இப்படி கண் கூச வைக்கும் கவர்ச்சியில் அவர் இறங்கி இருப்பது முகம் சுளிக்க வைத்துள்ளது. குடும்ப பாங்கான கேரக்டர்களில் அவரைப் பார்த்த ஆடியன்ஸ் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை.

அதனாலயே இந்த வீடியோவுக்கு தற்போது மோசமான கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தினேஷ் நல்லவேளை எஸ்கேப் ஆகிட்டாரு.

குத்துவிளக்குன்னு நினைச்சா இப்படி ஐட்டம் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே என ரசிகர்கள் ரட்சிதாவை வறுத்து எடுத்து வருகின்றனர். உண்மையில் இப்படி ஒரு அவதாரம் அவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை.

Trending News