புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கர்ப்பமாக இருக்கும் சக்காளத்திக்கு வேலைக்காரியாக மாறப்போகும் பாக்கியா.. உண்மையை போட்டு உடைத்த ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கர்ப்பம் ஆனதை கோபி வீட்டில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார். அதே நேரத்தில் குழந்தை வேண்டாம் என்று ராதிகாவிடம் சொல்லியும் கேட்காததால் பெற்றெடுக்கும் முடிவிற்கு வந்து விட்டார்கள். இதனால் கோபி வீட்டில் எப்படி சொல்ல என்ற தயக்கத்துடனே இருந்து வருகிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் இருப்பவர்களுக்கு ராதிகா மீது சந்தேகம் வரும்படி தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறார். போதாதற்கு புளிப்பான விஷயங்களை தான் விரும்பி சாப்பிடுகிறார். ஒருவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது எப்படி இருப்பாங்களோ அப்படியே ராதிகா நடந்து கொள்வதால் பாக்யாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது.

அதிர்ச்சியாக நிற்கும் பாக்யா

அந்த வகையில் ராதிகாவிடம் நேரடியாக பாக்கியா கேட்கிறார். நீங்க பண்ணுவதெல்லாம் பார்க்கும்பொழுது ஒருவேளை கர்ப்பமாக இருக்கு போல என்று சொல்கிறார். அதற்கு ராதிகாவும் ஆமாம் நான் டெஸ்ட் பண்ணி டாக்டர் கிட்டயும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று ராதிகா சொன்னதும் பாக்யா அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கோபி மற்றும் ராதிகா குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கும் ஈஸ்வரி சந்தோஷப்பட்டு ராதிகாவை தலையில் தூக்கி வைத்து ஆட போகிறார். பிறகு வழக்கம் போல் பாக்கியா, கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிற்கு வேலைக்காரியாக இருந்து அனைத்து பணிவிடையும் பண்ணப் போகிறார்.

கடைசியில் சக்காளத்தி பிள்ளைக்கும் சேர்த்து பாக்கியா சம்பாதிக்க போகிறார் போல. இதெல்லாம் என்ன குடும்பம் பார்க்கவே கன்றாவியா இருக்கு என்று புலம்பி கமெண்ட் பண்ணி வருகிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் கோபி பேரன் பேத்தி எடுத்த வயதில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக ஆகப்போகிறார்.

பிறகு ஈஸ்வரி இந்த காரணத்திற்காகவே, பழனிச்சாமிக்கும் பாக்யாவிற்கும் கல்யாணத்தை நடத்தலாம் என்று கூட முடிவு பண்ணலாம். ஆக மொத்தத்தில் இந்த நாடகமே மட்டமான கதை என்று சொல்லும் அளவிற்கு இயக்குனர் இந்த நாடகத்தைக் கொண்டு போகிறார்.

Trending News