வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Oru Nodi Movie Review – ரத்னதிற்கு டஃப் கொடுக்கும் தமனின் ஒரு நொடி முழு விமர்சனம்.. இந்த வாரம் ஜெயிக்க போறது யார் தெரியுமா?

Oru Nodi Movie Review : மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர், தீபா, பழ கருப்பையா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஒரு நொடி படம். இன்று விஷாலின் ரத்னம் படம் வெளியான நிலையில் அதற்கு டஃப் கொடுத்ததா ஒரு நொடி என்பதை பார்க்கலாம்.

அதாவது ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாக மாறலாம். ஏனென்றால் நாம் ஒரு நொடியில் எடுக்கும் முடிவு அல்லது நிகழ்வு பல மாற்றங்களை தரக் கூடும். அவ்வாறு நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், ட்விஸ்ட் என எதிர்பார்க்காத பல விஷயங்களை கொடுத்திருக்கிறார்.

எம்எஸ் பாஸ்கர் தனது மகளின் திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்தினார். ஆனால் அதற்கான கடன் வாங்கிய நிலையில் கட்ட முடியாத சூழ்நிலையில் தன்னுடைய நிலத்தை அடகு வைக்கிறார். குறித்த நேரத்தில் பணத்தை கொடுத்து திரும்பி விடுகிறேன் என்று உறுதியளிக்கிறார்.

அதன்படி சொன்ன நேரத்தில் பணத்தையும் எடுத்துக்கொண்டு நிலத்தை மீட்க செல்லும்போது எம் எஸ் பாஸ்கர் காணாமல் போகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி காவல்துறையில் தனது கணவரை காணவில்லை என்ற புகார் கொடுக்க செல்கிறார்.

சஸ்பென்ஸ் நிறைந்த தமனின் ஒரு நொடி

அங்க போலீஸ் அதிகாரியாக இருக்கும் தமன் இந்த புகாரை விசாரிக்கிறார். அப்போது திடீரென இளம் பெண் ஒருவரின் மர்ம கொலை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எம்எஸ் பாஸ்கர் மற்றும் இளம் பெண் என இந்த இரண்டு வழக்கிலும் சம்மந்தம் இருக்கிறதா என்று தமன் ஆராய்கிறார்.

மேலும் எம்எஸ் பாஸ்கர் கிடைத்தாரா, அந்த இளம் பெண்ணின் மரணத்திற்கான காரணம் என சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக படம் நகர்கிறது. ரசிகர்கள் துளியும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸை இயக்குனர் வைத்திருக்கிறார்.

படத்தின் கதாபாத்திர தேர்வு அற்புதமாக செய்துள்ளார் இயக்குனர். குறிப்பாக படத்தின் கதாநாயகன் தமன் தனது தோரணையில் போலீஸ் மிடுக்குடன் புத்திசாலித்தனத்தையும் காட்டியிருக்கிறார்.

படத்தில் மைனஸ் என்றால் இசை பெரியளவில் படத்திற்கு கை கொடுக்கவில்லை. மேலும் சில காட்சிகள் மிகவும் மெதுவாக சென்றது சோர்வை ஏற்படுத்துகிறது. மற்றபடி ஒரு நொடி படம் கண்டிப்பாக ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் தான். விஷாலுக்கு ஒரு கடுமையான போட்டியை தான் தமன் ஒரு நொடி படம் மூலம் கொடுத்திருக்கிறார். ஒரு நொடி இறுதி வரைக்கும் திகில் நொடி!

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

- Advertisement -spot_img

Trending News