Dhanush: தனுஷ் காட்டுல அட மழை என்று சொல்வதற்கு ஏற்ப கைவசம் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார். தற்போது ராயன் படத்தை அவரே எழுதி இயக்கி நடித்து வருகிறார். இதில் எஸ்ஜே சூர்யா, சுந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மே 30ஆம் தேதி ரிலீஸ் தேதியை முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் ஜூன் மாதத்தில் இந்தியன் 2 சேனாதிபதி தாத்தா மிரட்ட வருகிறார். அப்படி அந்த படம் வந்துவிட்டால் எப்படியும் மூன்று வாரங்கள் திரையரங்குகள் முழுவதும் பிஸியாகிவிடும்.
வம்பு வேண்டாம் என ஒதுங்கிய தனுஷ்
அந்த நேரத்தில் நம் படத்தை இறக்கினால் விரைவில் எடுத்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த வம்பை வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்ளலாம் என நினைத்து ஜூலை மாதத்தில் ராயன் படத்தை ரிலீஸ் பண்ணலாம் என தள்ளி வைத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் மே மாதத்தில் ஏகப்பட்ட ரீ ரிலிஸ் படங்கள் வருவதால் அதனுடனும் போட்டி போட்டு மோத முடியாது.
இதனால் எந்த சிக்கலிலும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு அடியையும் பார்த்து பக்குவமாக எடுத்து வைத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து குபேரா என்ற படத்தில் கமிட் ஆகி நடித்த வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது.
மேலும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒன்று கோடீஸ்வரனாக மற்றொன்று ஒன்றுமே இல்லாத பிச்சைக்காரன் போல நடிப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. இவருடன் சேர்ந்து நாகார்ஜுனாவும் கமிட்டாகி இருக்கிறார். அத்துடன் ராஷ்மிகா மந்தனா இதில் தனுஷ்க்கு ஜோடியாக இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. ராயன் படத்தை தொடர்ந்து அடுத்து இப்படத்தை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்.