வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

3வது நாள் வசூலில் ஏமாற்றத்தை சந்தித்த ரத்னம்.. எல்லாத்தையும் பகைச்சுக்கிட்டு விஷால் போட்ட தப்பு கணக்கு

Vishal : ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவான ரத்னம் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து வரும் விஷால் ரத்னம் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் ரத்னம் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பு கொடுத்தனர். ஹரியும் தனது சாயலில் பக்கம் ஆக்சன் கமர்சியல் படமாக ரத்னம் படத்தை கொடுத்திருந்தார்.

அதுவும் சண்டைக்காட்சிகளில் திரையரங்குகளில் கைதட்டல் ஒலித்தது. ஆனால் ரத்னம் பட ப்ரமோஷன் போதே கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக விஷால் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி சில தியேட்டர்களில் ரத்னம் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

3வது நாள் விஷாலின் ரத்னம் கலெக்ஷன்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரத்னம் படம் 2.50 கோடி வசூல் செய்தது. சனிக்கிழமை மிகுந்த சருக்களை சந்தித்தது. அதாவது 60 இலிருந்து 70 லட்சம் வரையில்தான் வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமை எப்படியும் வசூலை அள்ளிவிடலாம் என்று விஷால் கணக்கு போட்டிருந்தார்.

ஆனால் நேற்றைய தினம் வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்தது. ஆகையால் ரத்னம் படக்குழு வருத்தத்தில் உள்ளது. எப்படியும் 100 கோடி கலெக்ஷனை அள்ளும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் தற்போது வரை ஆறு கோடி வரையில் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

அதுவும் அடுத்த வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானால் ரத்னம் படம் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் இதெல்லாம் தெரியாமல் விஷால் இப்போது தனது சம்பளத்தை உயர்த்தி கொண்டிருக்கிறாராம்.

- Advertisement -spot_img

Trending News