வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Raghava Lawrence: நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவேன்.. ராகவா மாஸ்டரின் விவசாயிகளுக்கான மாற்றம்

Raghava Lawrence: ஒரு நடிகராக இருந்தாலும் ராகவா லாரன்ஸ் சமூக பணிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இப்படி அவர் எத்தனையோ நல்ல விஷயங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவர் மாற்றம் என்ற சமூக பணியை தொடங்கி இருக்கிறார். தன்னுடைய அறக்கட்டளை மூலம் இப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கும் அவர் இன்று அதற்கான தொடக்கப் புள்ளியை வைத்துள்ளார்.

விவசாயிகளுக்கான டிராக்டர்

raghava-lawrence
raghava-lawrence

ஏற்கனவே இது குறித்து அறிவித்திருந்தாலும் உழைப்பாளர் தினமான இன்று அவர் விவசாயிகளுக்காக மாற்றம் பணியை ஆரம்பித்துள்ளார். அதன்படி 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

மாஸ்டருடன் எஸ் ஜே சூர்யா

sj surya-lawrence
sj surya-lawrence

அது குறித்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் மாஸ்டர் நான் இதை செய்வேன். அதை செய்வேன் என்று சொல்ல மாட்டேன். செஞ்சு காட்டுவேன். இது மாற்றமா இல்லையான்னு நீங்க சொல்லுங்க என கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் தொடங்கிய மாற்றம்

மேலும் அந்த வீடியோவில் புது டிராக்டர்கள் வந்து இறங்குவதும் காட்டப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்த தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி இந்த சமூகப் பணியில் எஸ் ஜே சூர்யாவும் கைகோர்த்துள்ளார். அவரை தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இப்படி ஆச்சரியப்படுத்தி இருக்கும் இந்த மாற்றம் விரைவில் பல விஷயங்களை தொடங்க இருக்கிறது. அதன் முதல் கட்டமாக எங்கெல்லாம் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்களோ அவர்களை தேடி போய் நான் உதவுவேன் என மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த சேவைக்கு ஏகப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகிறது.

- Advertisement -spot_img

Trending News