செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Mahanadhi: விஜய் கொடுத்த அலப்பறை, கடுப்பான பசுபதி.. ராகினியின் கல்யாணத்தை மீண்டும் தடுக்க போகும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி வருகிறது. அந்த வகையில் காவிரிக்கு ஒரு சின்ன விஷயத்தில் கூட சங்கடம் வந்து விடக்கூடாது என்று ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து செய்து வருகிறார் விஜய்.

அந்த வகையில் காவிரி அவருடைய வீட்டிற்கு புதிதாக கட்டில் வாங்கி கொடுக்கிறார். ஆனால் ஏற்கனவே கங்கா வீட்டிற்கு தேவையான கட்டில் ஆர்டர் போட்டுவிட்டார். அது தெரியாத காவிரி வீட்டிற்கு நேரடியாக கட்டில் வாங்கிட்டு வந்ததும் கங்காவிற்கு கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை.

அத்துடன் என்னால் இந்த வீட்டிற்கு எதுவுமே பண்ண முடியாது. நான் இங்கே ஒரு தண்டமாக தான் இருக்கிறேன் என்று வருத்தத்துடனே குமரனை கூட்டிட்டு ஆர்டர் போட்ட கடைக்கு போகிறார். அங்கே போனதும் கட்டில் வேண்டாம் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று குமரன் போராடி வாங்கி விட்டார்.

பிறகு விஜய் ஆபீஸில் காவிரி எங்கே என்று தேடிப் பார்க்கிறார். அந்த நேரத்தில் அஜய்யிடம் காவிரி பற்றி கேட்கிறார். ஆனால் அவர் எனக்கு தெரியவில்லை என்று சொல்லுகிறார். பிறகு முக்கியமான ஒரு ஃபைல் வேண்டும் அதைத் தேடிப் பிடித்துக் கொடு என்று விஜய் சொல்கிறார்.

மறுபடியும் அவமானப்படும் ராகினி

அந்த நேரத்தில் காவேரி ஆபீஸ்க்கு வந்ததும் அஜய் கொஞ்சம் காவிரியை திட்டுகிறார். இதை பார்த்ததும் விஜய் நான் இந்த கம்பெனிக்கு MD என்னுடைய மனைவி எப்ப வேண்டுமானாலும் வரலாம் போகலாம் எல்லா உரிமையும் இருக்கிறது. அதை நீ ஒன்னும் கேட்கத் தேவையில்லை என்று அஜய்யை திட்டுகிறார்.

ஆனால் இதற்கிடையில் காவேரி ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது அஜய் இடம் சொல்லிவிட்டு பைலையும் கொடுத்துட்டு தான் போயிருக்கிறார். அதை விஜய் முன்னாடி சொல்லும் பொழுது அஜய் அப்படியே மாற்றி பொய் சொல்லிவிட்டார். அதாவது காவேரி எதையும் என்னிடம் கொடுத்துட்டுப் போகவில்லை. என்கிட்ட சொல்லிட்டு போகவில்லை என்று காவேரி மீது தவறு இருப்பதாக கூறிவிட்டார்.

ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய், காவிரியை கேபினுக்கு கூட்டிட்டு போய்விட்டார். இதனை தொடர்ந்து ராகினிக்கும் அஜய்க்கும் நிச்சயதார்த்தம் நடப்பதற்கு கோவிலில் பசுபதி குடும்பத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு தாத்தா, விஜய் மற்றும் காவிரி போகிறார்கள்.

அப்பொழுது கெத்தாக விஜய் காரை விட்டு இறங்கி காவேரி இருக்கும் பக்கத்தில் காரை திறந்து ராஜ மரியாதை கொடுத்து அலப்பறையை தெறிக்க விட்டுவிட்டார். இதை பார்த்த பசுபதி மூஞ்சில் ஈ ஆடல. ஆனால் ராகினி விஜய் வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது என்ற விஷயத்தில் காவிரி உறுதியாக இருக்கிறார். அதனால் கல்யாணத்தை தடுப்பதற்கு ஏதாவது ஒரு பிளான் பண்ணி மீண்டும் ராகினி கல்யாணத்தை நிறுத்தப் போகிறார்.

இதற்கிடையில் நவீன் பின்னாடி யமுனா சுற்றி வருகிறார். ஆனால் அது தெரியாமல் நவீன், யமுனா நல்லா படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் யமுனா அது உதவி என்று கூட யோசிக்காமல் நவீனுக்கும் நம் மீது காதல் இருக்கிறது என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். கடைசியில் இது எங்க போய் முடிய போகிறதோ.

Trending News