Romantic Star Rejects Rajini Film: ரஜினி படம் என்றால் நமக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று போட்டி போட்டுக் கொண்டு வருபவர்கள் மத்தியில் அக்கட தேசத்தை சேர்ந்த ஒரு ரொமாண்டிக் நடிகர் அந்த வாய்ப்பை உதறித் தள்ளியுள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஆந்திரா கடப்பாவில் நடைபெற்று வருகிறது.
டிஜே ஞானவேல் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் படம் வேட்டையன். இதன் சூட்டிங் கிட்டத்தட்ட 70% முடித்துவிட்டார் இயக்குனர் ஞானவேல். இந்த படத்தில் ஃபகத் பாசில், அமிதாபச்சன், ரானா டகுபதி என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
வேட்டையனிடம் இருந்து ஜகா வாங்கிய ரொமான்டிக் ஸ்டார்
ஆரம்பத்தில் இந்த படத்தில் ராணா கதாபாத்திரத்திற்கு முதலில் தெலுங்கு நடிகர் ஒருவரை தான் அணுகி இருக்கிறார் ஞானவேல். ஆனால் அவர் ரஜினி படம் என்றால் நமக்கு ஹோப் இருக்காது என்று அதை நிராகரித்து விட்டார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி ரொமான்டிக் நடிகராக வலம் வருபவர் நானி. தமிழில் இவர் நடித்த நான் ஈ என்ற படம் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். இவர் தான் இப்பொழுது ரஜினியின் வேட்டையின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இப்பொழுது நானி கதாபாத்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை களம் இறக்கியுள்ளார் ஞானவேல். ரானா டகுபதி இவருக்கு பதிலாக இந்த படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்து வருகிறாராம். படத்தில் வில்லன் யார் என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆக தான் இருக்கிறது