Top 7 tamil movies fully related with Kidnapping Robbery and Gangster: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சத்திற்கும் பஞ்சமில்லை அந்த கதாபாத்திரத்தை ஏற்கும் நம் திறமையான நடிகர்களுக்கும் பஞ்சமில்லை.
கடத்தல், கொள்ளை மற்றும் கேங்ஸ்டர் அடிப்படையிலான படங்கள் பல வெளி வந்தாலும் அவற்றில் சக்கை போடு போட்ட 7 படங்களை காணலாம்
பீட்சா: கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா, பிரம்மாண்ட பட்ஜெட் முன்னணி நடிகர்கள் என்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடம் கொடுக்காமல் ஒரே ஒரு டார்ச் லைட்டை மட்டும் வைத்து திகில் ஊட்டி,
விஜய் சேதுபதி தனது அசத்தலான நடிப்பால் முதலாளியின் பணத்தை ஆட்டையை போட்டு காதலியுடன் குஜால் ஆகி இருப்பார்.
ஜென்டில்மேன்: சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் சங்கரின் ஜென்டில்மேன். அறிமுகமான முதல் படத்திலே தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்றிருந்தார் சங்கர்.
கல்வி வியாபாரம் ஆவதை தடுக்கும் பொருட்டு, வித்தியாசமான கதை அம்சத்துடன் பெருத்த பண முதலைகளின் கருப்பு பணத்தை திருடி, பொது சேவைக்கு பயன்படுத்துவதாக அர்ஜுன், நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருந்தார்.
கொள்கை வைத்து கொள்ளை அடித்த சூது கவ்வும்
சூது கவ்வும்: தமிழ் சினிமாவில் அழுத்துப்போன கடத்தல் கதையை காலத்துக்கு தகுந்த மாதிரி கொள்கையுடன் காமெடியாக கூறி ரசிகர்களை சபாஷ் போட வைத்தது தான் இந்த சூது கவ்வும்.
கடத்தல் தொழிலிலும் பக்தியாக இருந்த விஜய் சேதுபதியின் நடிப்பு அபாரத்திலும் அபாரம். 2013 நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் வேற லெவல்ல ஹிட்டானது.
துணிவு: ஹச் வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு, மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வங்கிகளின் முகத்திரையை கிழிப்பதோடு மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
“காசேதான் கடவுளடா” என்ற தத்துவத்தில் டார்க் டெவில் என வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அதகளம் பண்ணியிருந்தார் அஜித்.
மங்காத்தா: அஜித்தின் சினிமா கேரியரில் தரமான கேங்ஸ்டர் படம் என்றால் அது மங்காத்தா தான். கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாகக் கொண்டு பணத்தை கொள்ளை அடித்தனர் அஜித் மற்றும் அவரது சகாக்கள்.
தீம் மியூசிக், பாடல்கள், ஆக்சன், காதல், துரோகம், நட்பு என அனைத்து விதமான இடங்களிலும் ஸ்கோர் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மங்காத்தா.
ராஜதந்திரம்:2015 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜதந்திரம் திரைப்படம் நகை கடையை கொள்ளை அடிப்பது தொடர்பான கதை அம்சம் கொண்டது.
எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுவென அமைந்த திகில் ஊட்டும் காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனிக்கே அழைத்து சென்றது.
திட்டமும் அதை செயல்படுத்திய விதமும் கொள்ளையர்களுக்கு மட்டுமல்ல படத்திற்கும் வெற்றியை தேடி தந்தது.
சதுரங்க வேட்டை: மனித வாழ்வில் அன்றாட நடைமுறையில் நடக்கும் குற்றப் பின்னணியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் சதுரங்க வேட்டை.
ஒருவனின் பண தேவை- மற்றவரை ஏமாற்றுபவனாகவும், ஆசை மனிதனை ஏமாறுபவனாகவும் மாற்றுவதை இரு வேறு கோணங்களில் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தார் இயக்குனர் ஹச் வினோத்.
யதார்த்த வசனங்களால் சபாஷ் போடச் செய்து திறமையான கொள்ளையை மாறுபட்ட விதத்தில் காட்சிப்படுத்திருந்தார் இயக்குனர்.